ஜனவரி 12ல் வருகிறது ஹனு-மான்

Date:

Share post:

ஜனவரி 12ல் வருகிறது ஹனு-மான்

ஜனவரி 12ல் வருகிறது பான்-வேர்ல்டு படம் ‘ஹனு-மான்’

ஜனவரி 12ம் தேதி சங்கராந்தியன்று பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் கூட்ட ணியில் உருவாகி யுள்ள ‘ஹனு-மான்’ என்ற படம் திரைக்கு வருகிறது.

ஜனவரி 12ல் வருகிறது ஹனு-மான் – படத்தின் வெளியீட்டு தேதி குறித்த போஸ்டரில் இதன் ஹீரோ தேஜா சஜ்ஜா, தனது கையில் ஹனுமன் கொடியுடன் ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு குதிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், ஜப்பானீஸ் ஆகிய 10 மொழி களில் ‘ஹனு-மான்’ படம் பான்-வேர்ல்ட்
படமாக வெளியாகிறது.

‘ஹனு-மான்’ படக் கதை, அஞ்சனாத்திரி என்ற கற்பனை இடத் தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹனுமனின் சக்திகளைப் பெற்ற ஹீரோ, அஞ்சனாத்திரிக்காக எப்படிப் போராடுகிறார் என்பது கதை.

தேஜா சஜ்ஜா, அமிர்தா அய்யர், விநய் ராய், வரலட்சுமி, கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி நடித்துள்ளனர்.

தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுரஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சவுரப் இசை அமைத்துள்ளனர். கே.நிரஞ்சன் ரெட்டி தயாரிக்க, மதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணைந்து தயாரித்துள்ளார்.

==================================================

த்ரிஷாவின் சரும பொலிவுக்கு காரணம் இதுதான்

த்ரிஷாவின் சரும பொலிவுக்கு காரணம் இதுதான் – காலையில் வெந்நீரில் கிரீன் டீ, மாலை கண்டிப்பாக மாதுளை ஜுஸ்,  மதியம் உணவிற்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ், இது உடலில் நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவும்.

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி என்றால் இன்றும் நம் நினைவுக்கு வருவது நடிகை த்ரிஷாதான்.

1999 – ல் வெளியான ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக திரையில் தோன்றிய த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமா கதாநாயகியாக அறிமுகமானவர்.

அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.  த்ரிஷாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி த்ரிஷாவை கனவுக்கன்னி என்று கொண்டாடத் தொடங்கினர்.

‘ஜோடி’யில் தொடங்கி மணிரத்தினம்  இயக்கி சமீபத்தில் வெளியான  ‘பொன்னியின் செல்வன்’ வரை  20 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் த்ரிஷா கோலோச்சி வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகைகளின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதும் சரிவதும் வழக்கமான ஒன்று, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகள் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை.

ஆனால் அன்று முதல் இன்று வரை த்ரிஷா தனக்கான இடத்தை ரசிகர்களின் மனதில் தக்க வைத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

40 வயதை அடைந்தாலும் 25 போல காட்சியளிக்கும் த்ரிஷாவின் தோற்றம், உடல் கட்டமைப்பு, சருமம், அழகு என்று நாளுக்கு நாள் வசீகர தோற்றத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சரும பராமரிப்பு குறித்து கேட்டபோது, “காலையில் வெந்நீரில் கிரீன் டீ, மாலை கண்டிப்பாக மாதுளை ஜுஸ்,  மதியம் உணவிற்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ், இது உடலில் நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...