சந்திரயான் 3 வந்ததும் நிலவிற்கு அருகே நடந்த அதிசயம்

Date:

Share post:

சந்திரயான் 3 வந்ததும் நிலவிற்கு அருகே நடந்த அதிசயம்

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் நேற்று எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்த தொடர்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ளும் முன் முக்கியமான இரண்டு விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் விஷயம்:

கடந்த ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது.

அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த திட்டம் இதன் மூலம் பாதி தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

விஷயம் 2:

இந்த திட்டம் தோல்வி காரணமாக நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் சோதனையை நிறைவு செய்வதற்காக சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட் மூலம் இதை கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் முதல் திட்டத்தில் இருந்தது போல இதில் ஆர்பிட்டர் இல்லை. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது.

இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு சென்றது.

இது சந்திரயான் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும்.

சந்திரயான் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படுத்தப்பட்டது சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல்.

பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திரயான் 3வை கொண்டு செல்ல உதவியது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான்.

எப்படி தொடர்பு:

இந்த நிலையில்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் நேற்று தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

இரண்டுக்கும் இடையில் எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் ரேடியோ அலைகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நாம் பூமியில் பயன்படுத்தப்படும் அதே ரேடியோ சிக்னல்தான் இங்கேயும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவை மிக எளிமையாக பிரச்சனையே இன்றி இணைப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் 4 வருடம் கழித்தும் இயங்கி வந்ததால்தான் இந்த முறை ஆர்பிட்டரையே இஸ்ரோ அனுப்பாமல் செலவை மிஞ்சும் செய்தது.

ஆர்பிட்டர் இல்லாமலே இஸ்ரோ விக்ரமை அனுப்பியது.

ஏன் தொடர்பு: விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய பின் சிக்னலை பெற மட்டுமே முடியும். முறையாக சிக்னலை வேகமாக அனுப்பி முடியாது.

இதற்கு ஆர்பிட்டர் தேவை. அதற்காகவே சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் உடன் விக்ரம் இணைந்துள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது முக்கியமான தகவலை பூமிக்கு அனுப்பவும், தொலைத்தொடர்பு ரீதியாக விக்ரம் லேண்டருக்கு உதவவும் இந்த ஆர்பிட்டர் உதவியாக இருக்கும்.

பூமிக்கு வேகமாக தகவல்களை அனுப்ப இந்த ஆர்பிட்டர் உதவும்.

இணைப்பு மெசேஜ்: “‘Welcome, buddy!’ என்ற மெசேஜ் மூலம் சந்திரயான் 2வின் ஆர்பிட்டர் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் உடன் இணைப்பை ஏற்படுத்தியது.

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதற்கு இது மேலும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 3 வந்ததும் நிலவிற்கு அருகே நடந்த அதிசயம்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...