சுட சுட நிலாவின் படங்களை அனுப்பிய சந்திரயான் 3

Date:

Share post:

சுட சுட நிலாவின் படங்களை அனுப்பிய சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிபெற்று உள்ளது.

உலகளவில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி சாதித்து உள்ளன.

இந்த வரிசையில் 4 வது நாடாக சேர்ந்து இருக்கிறது வளர்ந்து வரும் நாடான இந்தியா. கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்து இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தெற்கு பகுதியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் வகையில் சந்திரயான் 3 இஸ்ரோ அனுப்பியது.

விண்ணில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை அது சுற்றி வந்தது.

அதன் பின்னர் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3, பல நாட்களாக நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்தது.

இந்த நிலையில் இன்று மாலை சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது.

நிலாவை விக்ரம் லேண்டர் தொட்ட உடனே சந்திரயான் 3 இஸ்ரோவுக்கு ஒரு மெசேஜை அனுப்பியது.

இதுதொடர்பாக இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், “இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன்.

நீங்களும்தான். சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலமாக வெற்றிகரமாக இந்தியா நிலவில் விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

குறிப்பாக விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு நிலவின் மேற்பகுதியில் இருந்து எடுத்த புகைப்படங்களை அனுப்பி இருக்கிறது.

அப்படி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்களை இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது. நிலவுக்கு மிகவும் அருகாமையில் சாம்பல் நிறத்தில் பல்வேறு பள்ளங்களுடன் அந்த படங்கள் காட்சி தருகின்றன.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ள இஸ்ரோ “விக்ரம் லேண்டர் உடனான பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது.” என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். இந்த திட்டத்தில் செயல்பட்ட பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 என மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குனர்களாக இருந்து இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கியது தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள்தான். முதலில் சந்திரயான் 1 திட்டம் 2008 ல் செயல்படுத்தப்பட்டது.

இந்த சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.

இதன்பின் சந்திரயான் 2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது இஸ்ரோ இயக்குநர் தமிழரான கே சிவன்.

அதேபோல் சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த வனிதா எனும் விஞ்ஞானி ஆவார்.

இந்த நிலையில் தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். இவர்கள் மூவரும் தமிழர்கள்.

தமிழ் வழி பாடத்தில் அரசு பள்ளியில் படித்தவர்கள். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இந்த நிலையில்தான் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு பல்வேறு ஜாதி அமைப்புகள் உரிமை கொண்டாடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜாதி அமைப்புகள்: பல்வேறு ஜாதி அமைப்புகள் நேற்றில் இருந்து அவருக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.

அவர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த பகுதியில் பெரும்பாலாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜாதி வீரமுத்துவேலுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...