சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

Date:

Share post:

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே போகிறது என்ற எண்ணம் வந்ததால் சிவனை நோக்கி தவம் செய்ய முடிவெடுக்கிறார்.

ஆனால் சூரிய பகவானை தனியாக விட்டு செல்ல அவருக்கு மனம் இல்லாததால் தன்னுடைய நிழலை கொண்டு சாயாதேவி என்றொரு பெண்ணை தன்னை போல உருவாக்குகிறார்.

பின் சாயாதேவியம் தான் இருந்து செய்யவேண்டிய அனைத்தையும் நீ செய்யவேண்டும் என்று கூறிவிட்டு குதிரை வடிவம் எடுத்து சிவனை நோக்கி தவம் இருக்க செல்கிறார் உஷா தேவி.

சூரிய பகவானும் சாயாதேவியை உஷா தேவி என்று நினைத்து அவரோடு வாழ்கிறார். அவர்கள் இருவருக்கும் கிருதவர்மா (சனி) என்ற ஆண் குழந்தையும், தபதி என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது.

தாயின் சாயல் சனிபகவானுக்கு வந்ததால், நிழலை போன்று கருமையான நிறத்தில் இருக்கிறார். சிறுவயதில் இருந்தே சனிபகவானின் செயல்கள் சில சூரியபகவானுக்கு பிடிக்கவில்லை.

இதனால் சூரிய பகவான் சனிபகவானை காட்டிலும் மற்ற குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறார்.

ஆரம்ப கட்டத்தில் தந்தையின் அன்பிற்காக ஏங்கிய சனி பகவான் வளர வளர தந்தையின் மீது வெறுப்பு கொள்கிறார். ஒரு கட்டத்தில் தந்தையை தன் விரோதியை போல நினைக்க துவங்குகிறார்.

தன்னுடைய தந்தையை காட்டிலும் தான் சக்தி படைத்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி காசிக்கு சென்று அங்கு லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்கிறார்.

பின் பல்லாண்டு காலம் சிவனை நோக்கி கடுந்தவம் புரிகிறார். சனிபகவானின் பக்தியை கண்டு மெய்சிலிர்த்த சிவ பெருமான் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்.

நவகிரகங்களில் ஒருவராய் இருக்க வேண்டும், நவகிரங்களில் தன்னுடைய பார்வைக்கே வலிமை அதிகமாக இருக்க வேண்டும், தன் தந்தையை விடவும், தன் உடன் பிறந்தவர்களை விடவும் பலசாலியாக இருக்க வேண்டும் , சுருக்கமாக சொல்லப் போனால் உங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தரவேண்டும் என்று வரம் கேட்டார்.

சனியின் தவப்பயன் காரணமாக ஈசன் அவர் கேட்ட வாரங்கள் அனைத்தையும் தந்தருளினார். அன்று முதல் சனீஸ்வரன் என்று அவர் அழைக்கப்பட்டார். ஈஸ்வரனிடம் இருந்து பல அற்புத வரங்களை பெற்றதால் சனியை கண்டு இன்றுவரை தேவாதி தேவர்கள் முதற்கொண்டு பலரும் அஞ்சுகின்றனர்.

ஆனால் சனிக்கே தொல்லை கொடுத்தவர்கள் அனுமனும் விநாயகரும் என்று பல புராண கதைகள் கூறுகின்றன.

பாப கிரகங்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் இவரின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை ஆகும்.

காசியில் சிவபெருமானிடம் சனீஸ்வரன் வரம் பெற்ற பிறகு திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயிலிற்கு வந்து சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

திருநள்ளாறில் சனீஸ்வரனுக்கு இப்போது தனி சந்நிதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஆகஸ்ட் 15ஆம் தேதி வக்ர நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
யோக நிலைக்கு வந்திருக்கும் சனி பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
இதன் மூலம் குறிப்பிட்ட நான்கு ராசிகள் மட்டும் பண அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். 
மேஷ ராசி:
சனிபகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் தர்மஸ்தானத்தின் அதிபதியாக விளங்கி வருகிறார். லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்.
வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
ரிஷப ராசி:
சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை செய்து தரப் போகிறார். சனிபகவானால் உருவான ராஜயோகம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் திடீர் பண வரவு உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். 
மிதுன ராசி:
சனி பகவான் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பல்வேறு வகையான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார்.
திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களது ஆசைகள் நிறைவேறும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாடுகள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 
துலாம் ராசி:
சனிபகவானின் யோக பயணத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான நற்பலன்கள் கிடைக்க போகின்றது. திடீர் பணவரவு உண்டாகும்.
நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...