நிலாவை தொட்டுட்டேன் இந்தியாவும் சந்திரயான்3 அனுப்பிய மெசேஜ்

Date:

Share post:

நிலாவை தொட்டுட்டேன் இந்தியாவும் சந்திரயான்3 அனுப்பிய மெசேஜ்

சந்திராயன் 3 திட்டத்தின் கீழ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேறியதை அடுத்து,

இந்த திட்டத்தின் இயக்குநரான தமிழர் வீரமுத்துவேலைுவை சக விஞ்ஞானிகள் பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 திட்டத்தின் முதல் படியை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

கடந்த சந்திராயன் 2 திட்டத்தில் நிலவில் மோதி லேண்டர் நொறுங்கியதால் நமது இந்திய விஞ்ஞானிகளும் நொறுங்கி போயினர்.

ஆனால், மீண்டும் தன்னம்பிக்கையுடன் சந்திராயன் 3 திட்டத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அடுத்த நொடியே பார்த்தது.

இந்த சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குநரான வீரமுத்துவேலுவை தான்.

ஏனெனில், இந்த திட்டத்திற்காக இரவும் பகலும் உழைத்தவர்களில் முக்கியமானவர் வீரமுத்துவேல். மேலும்,

அந்த கடினமான பணிகளுடன் சக விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்தும், வழிநடத்தியும் அவர் சென்றிருக்கிறார்.

விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் வரை வீரமுத்துவேலின் முகம் இறுகிப் போயிருந்தது.

ஏதேனும் தவறு நிகழ்ந்து விடுமோ, ஓராண்டுக்கும் மேலாக இரவு பகல் பாராமல் உழைத்தது வீணாகி விடுமோ என்ற கேள்வி அவரது முகத்தில் தெரிந்தது.

ஆனால், விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் அப்படியே அவரது முகம் மலர்ந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.

அவரை சக விஞ்ஞானிகள் அனைவரும் சூழந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய வீரமுத்துவேல், “விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது நமது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி.

என்னுடன் இந்த திட்டத்தில் பங்களித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலவில் இந்தியா கால் பதித்துவிட்டதை இன்று உலகமே பார்த்து வியந்து வருகிறது.

இந்த திட்டத்தில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நிலாவை விக்ரம் லேண்டர் தொட்ட மறுநொடியில் இஸ்ரோவுக்கு சந்திரயான் 3 விண்கலம் அனுப்பிய மெசேஜ் விஞ்ஞானிகளை வாய் விட்டு மகிழ்ச்சியாக சிரிக்க வைத்து இருக்கிறது.

நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

எந்த நாடுகளின் விண்கலமும் செல்லாத நிலவின் தெற்கு பகுதியில் நிலை நிறுத்தும் வகையில் இஸ்ரோ இதை அனுப்பியது.

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் அது 5 முறை சுற்றி வந்தது.

அதன் பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் அது நுழைந்தது. பல நாட்களாக அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்து உள்ளது.

விக்ரம் லேண்டர் நிலாவை தொட்ட உடனே இஸ்ரோவுக்கு சந்திரயான் 3 ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் இஸ்ரோ வெளியிட்டு உள்ள பதிவில், “இந்தியா..

நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். நீங்களும்தான். வெற்றிகரமாக சந்திரயான் 3 நிலாவில் தரையிறங்கி உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பாக நிலவில் விண்கலத்தை அனுப்பிய நாடுகள் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகியவை மட்டுமே.

இந்த வரிசையில் 4 வது நாடாக இடம்பிடித்து உள்ளது இந்தியா. 3 வளர்ந்த நாடுகளின் வரிசையில் ஒரு வளரும் நாடான இந்தியா இடம்பிடித்து இருப்பது உலக நாடுகளை புருவம் உயர்த்த வைத்து உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பினர்.

ஆனால், அது தோல்வி அடைந்தது. மனம் தளராத விஞ்ஞானிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்தினர்.

ஆனால் ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதியதி வெடித்து சிதறிது.

இந்த நிலையில் தற்போது சந்திராயன் 3 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தி இஸ்ரோ சாதித்து உள்ளது.

நிலாவை தொட்டுட்டேன் இந்தியாவும் சந்திரயான்3 அனுப்பிய மெசேஜ்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...