ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

Date:

Share post:

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது.

1818 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்ட அட்சியர் ஜான் சுல்லிவன் அவர்களின் உதவியாளர்கள் திரு விஸ் மற்றும் கிண்டர்ஸ்லி ஆகியோர் ரங்கசாமி சிகரத்தில் உள்ள கோத்தகிரி என்னும் இடத்தை கண்டறிந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜான் சுல்லிவன் அவர்கள் இந்த இடத்தின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார்.

1819 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று அவர் தனது குடியிருப்புகளை அங்கு நிறுவியதோடு, வருவாய் சபைக்கும் அறிக்கை செய்தார்.

‘நீலகிரி’ என்பது நீல மலை ஆகும் (நீல – நீலம் மற்றும் கிரி – மலை) இந்த பெயரைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடுகையில் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

மலைப்பகுதிகளை சூழ்ந்து கொண்டிருக்கும் ‘குறிஞ்சி’ பூவின் ஊதா பூக்கள் மலரும் காலப்பகுதியில், மலைகளின் அடிவாரத்தில் வாழும் மக்கள், நீலகிரி என்ற பெயரைக் கொடுத்திருக்க வேண்டும்.

நீலகிரி அரசியல் வரலாற்றின் முந்தைய குறிப்பு, W. பிரான்சிஸ் படி, மைசூர் கங்கா வம்சத்தை சார்ந்திருக்கிறது.

1789 ஆம் ஆண்டு நீலகிரி பிரிட்டிஷ் அரசிடம் கொடுக்கப்பட்டவுடன், அது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.

1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நீலகிரியின்  ஆணையராக நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார்.

அவர் 1882 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டத்தை அமைத்தார் பின் ஆணையர் இடத்தில் ஒரு ஆட்சியர் நியமிக்கப்பட்டார்.

1882 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி, ரிச்சர்ட் வெலெஸ்லி பார்லோ நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஆனார்.

நீலகிரி மாவட்டம் கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை பால தடுப்புச் சுவர் சேதமடைந்தது.

இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகி மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், 15 மணி நேரத்தில் தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்தை அதிகாரிகள் சீர் செய்தனர்.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதிகள் சர்வதேச சுற்றுலா தளங்கள் ஆகும். இந்த பகுதியில் ஏராமளான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன.

குறிப்பாக ஊட்டி மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாதளம் ஆகும். இதமான கால நிலை நிலவும் மலைகளில் இளவரசியை காண தினமும் ஏராளமானோர் வருவார்கள்.

வார இறுதிகளில், முக்கிய விடுமுறை நாட்களில் மக்களால் வெள்ளத்தால் அலைமோதும்,

இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் தான், கேரளா, கர்நாடாக மாநிங்களை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து கட்டமைப்பை கொண்டுள்ளது.

வயநாடு உள்ளிட்ட கேரளாவில் உள்ளவர்கள், மைசூர் உள்ளிட்ட கர்நாடகாவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு வரவும் அங்கிருந்து செல்லவு ஊட்டி முக்கியமான போக்குவரத்து வழியாகவும் உள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே, மேல் கூடலுார் பழைய பாலத்தை ஒட்டி புதிய பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 6 மணி அளவில், அங்குள்ள பழைய பாலத்தை ஒட்டி கட்டப்பட்ட கருங்கல் தடுப்புகள் திடீரென இடிந்து விழுந்தது.

இதனால், நீலகிரி மாவட்டம் வழியாக தமிழகம், கர்நாடகா, கேரளா இடையே வாகன போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

ஓட்டுனர்கள், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து , தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வம், மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜா மேற்பார்வையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பாலத்தை ஒட்டி தற்காலிக பாலம் அமைக்கும் பணியை உடனே துவங்கினர். அங்கு விடிய, விடிய பாலம் அமைக்கும் பணி நடந்தது.

கூடலூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரெடிமேட் ‘பிரிகாஸ்ட் பாக்ஸ்’ பயன்படுத்தி, ஞாயிறு காலை 9:00 மணி அளவில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.

சுமார் 15 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் திறந்தவிடப்பட்டது. இதையடுத்தே தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் போக்குவரத்து சீரானது.

போலீசார் போக்குவரத்தை சீரமைத்த பின்னர் இயல்பு நிலை திரும்பியது. இதனால் மூன்று மாநில பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...