காபி/டீ குடிச்சதும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்

Date:

Share post:

காபி/டீ குடிச்சதும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்

ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது.

அப்படிக் குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு டீ குடிப்பதிலும் நன்மைகள் இருப்பதாகப் பல மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.

டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம்.

ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம்.

ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.

இந்தியாவில் காபி, டீ பிரியர்கள் ஏராளம். காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி, டீ குடித்து தான் அன்றைய தினத்தையே தொடங்குவார்கள்.

மேலும் எப்போது காபி, டீ குடிக்க கொடுத்தாலும், வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி குடிப்பார்கள்.

அந்த அளவில் இந்தியர்கள் காபி, டீயை விரும்பி குடிப்பார்கள். காபி, டீயானது உடலுக்கு உடலுக்கு சுறுசுறுப்பை அளிப்பதோடு, மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உவுகிறது.

இப்படிப்பட்ட காபி, டீயைக் குடிக்கும் போது நிறைய பேர் ஒரு தவறை செய்கிறார்கள். அது என்னவெனில், காபி, டீ குடித்த பின்னர் தண்ணீர் குடிப்பது தான்.

உண்மையில் இப்படியான பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்பது தெரியுமா? கீழே காபி, டீ குடித்ததும் உடனே தண்ணீர் குடித்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

வயிற்று பிரச்சனைகள்

டீ அல்லது காபி குடித்ததும், குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, அது வயிற்றில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும்.

அதுவும் இப்படி காபி, டீ குடித்த உடனேயே தண்ணீர் குடித்தால், வயிற்று வலி, அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.

பற்களுக்கு தீங்கு

விளைவிக்கும் நிறைய பேர் காபி, டீ குடித்த பின் பற்களில் கறைகள் படக்கூடாது என்பதற்காக தண்ணீர் குடிப்பதாக காரணம் கூறுவார்கள்.

ஆனால் உண்மையில், சூடான காபி, டீயைக் குடித்ததும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, அது பற்களில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஏனெனில் சூடாக ஒரு பானத்தை குடித்ததும் உடனே குளிர்ச்சியானதை குடிக்கும் போது, அது வாயில் உள்ள நரம்புகள் மற்றும் பற்களின் மேல் அடுக்கில் பிரச்சனைகளை வரத்தூண்டும்.

மூக்கில் இரத்தக்கசிவு

சிலருக்கு காபி, டீ குடித்ததும் மூக்கில் இருந்து இரத்தம் கசியலாம். மூக்கில் இருந்து இரத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

உங்களுக்கு இப்படி மூக்கில் இருந்து இரத்தம் கசியுமானால், காபி, டீ குடித்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உடனே நிறுத்துங்கள்.

சளி மற்றும் இருமல் நல்ல சூடான காபி, டீயைக் குடித்த உடனேயே குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, அது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை வரத்தூண்டலாம்.

அதோடு இப்பழக்கம் தொண்டையிலும் அடைப்பை ஏற்படுத்தி, தொண்டை கரகரப்பு பிரச்சனையை வரவழைக்கும். எனவே காபி, டீ குடித்ததும் தண்ணீர் குடிக்காதீர்கள்.

காபி/டீ குடிச்சதும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...