மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் வேலை: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

Date:

Share post:

மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் வேலை: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

Jobs under Central Government Scheme: Only those from Chennai District can apply

சென்னை கடலோர கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தின் கீழ், சென்னையின் கடலோர மீன்பிடி கிராமங்களில் காலியாக உள்ள சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்: சென்னை கடலோர கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இது முற்றிலும், ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். ஒரு வருடத்திற்கு பணிபுரிய அழைக்கப்படுவார்கள்.

கல்வித் தகுதி : மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 31.01.2023 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரரின் வயது 35-க்குள் இருக்க வேண்டும்.   நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000/- வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் 30.06.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதினை பூர்த்தி செய்து – ‘மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77. சூரியநாராயணா செட்டி தெரு, இராயபுரம், சென்னை-13‘ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...