மூட்டு வலி ஏன் வருகிறது

Date:

Share post:

மூட்டு வலி ஏன் வருகிறது

மூட்டு வலி ஏன் வருகிறது – இன்று முதியோர் மட்டுமல்லாது இளம் வயதினரையும் பாதிக்க கூடியதொன்றாக மூட்டு வலி காணப்படுகின்றது.

அதாவது மூட்டுகளுக்கிடையே ஓர் அழுத்தத்தையும், வலியையும் உணர்வதே மூட்டு வலி எனப்படும்.

மூட்டு வலி ஏன் வருகிறது

மூட்டு வலியானது இன்று பல்வேறுபட்ட செயற்பாடுகளினால் ஏற்படுகின்றது. அந்த வகையில் உடல் ரீதியான உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை போன்ற செயற்பாடுகளினால் மூட்டு வலியானது ஏற்படுகின்றது.

அதாவது கணிணியில் வேலைகளை மேற்கொள்பவர்கள் பெருவாரியாக இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் நீண்ட நேரம் ஒரே அமர்வில் இருந்து கொண்டு வேலையினை மேற்கொள்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் காணப்படும் துரித உணவு பழக்கவழக்கத்தினாலும் மூட்டு வலியானது ஏற்படுகின்றது. அதாவது அதிகப்படியான போசாக்கின்மையான உணவுகளை உட்கொள்வதனால் இந்த வகையான நோய் ஏற்படுகின்றது.

 

 

அதிகப்படியான உடற்பருமனை கொண்டமைந்து காணப்படுபவர்களுக்கு தசை இறுகப்பெற்று மூட்டு வலியானது வருகின்றது.

முதுமை, கிருமித்தொற்று, காசநோய் போன்ற காரணங்களினாலும் இது ஏற்படுகின்றது. மேலும் அதிகமாக ஓரே இடத்தில் அமர்ந்திருப்பதன் மூலமும் மூட்டு வலி ஏற்படும்.

மூட்டு வலியை தடுப்பதற்கான வழிகள்

அதிகப்படியான உடல் எடையானது மூட்டுக்களின் இணைப்பை சேதப்படுத்துகின்றது. இதன் காரணமாக கை, கால் போன்ற இடங்களில் மூட்டு வலி ஏற்படும் எனவே உடல் எடையை குறைப்பதன் ஊடாக இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.

உடற்பயிற்சி செய்வதன் ஊடாக மூட்டு வலியிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முடியும். அதாவது உடற்பயிற்சி செய்வதனுடாக மூட்டு தசையானது வீங்குவதையும் விறைப்படைவதையும் தவிர்க்க முடியும்.

உணவு பழக்கவழக்கத்தில் ஆரோக்கிமான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல் வேண்டும். கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது. வறுத்த உணவுகள், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தங்களை தவிர்ப்பதன் ஊடாக மூட்டு வலியை இல்லாது ஒழிக்க முடியும்.

யோகாவும் மூட்டு வலிக்கான நிவாரணமும்

யோகா பயிற்ச்சிகளை மேற்கொள்வதின் ஊடாக உடற்பருமன் ஏற்படுவதை தவிர்த்து கொள்ள முடியும். யோகா பயிற்ச்சியானது யூரிக் அமிலத்தின் அளவை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

வலி ஏற்படுகின்ற இடங்கள் மற்றும் விறைப்படைந்த மூட்டுக்கள் போன்றவையானது யோகா பயிற்ச்சியின் மூலமாக சேதமடைந்த இவ்வாறான மூட்டுக்களை சிறந்த முறையில் பாதுகாக்க துணை புரிகின்றது.

 

 

யோகாவின் மூலம் மனித உடலில் இரத்த ஓட்டம் சீராகுவதோடு தேவையற்ற நச்சுப்பொருட்கள் நீங்கி வலி குறைவதற்கு துணை செய்கின்றது.

யோகாசனத்தின் ஊடாக மூட்டு தசைகளில் ஏற்படும் வலியை தடுத்து மூட்டு இணைப்புக்களானது சீரடைகின்றதுடன் மேலும் உடல் ஆரேக்கியமும் பெற்று அன்றாட வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட யோகசனமானது துணை புரிகின்றது.

மூட்டு வலிக்கான அறிகுறிகள்

மூட்டு வலியானது ஏற்படும் போது ஆறு வாரத்திற்கும் மேலாக வீக்கம் குறையாமல் இருக்கும். வீக்கம் ஏற்படும்போது அது மூட்டு வலிக்கான அறிகுறிகளின் ஒன்றாகவே காணப்படும். மூட்டு வலியானது ஓர் இடத்திலிருந்து மற்றுமோர் இடத்திற்கு பரவக்கூடியதாக காணப்படும். மேலும் தசைகளிக் சக்தி குறைந்தும் காணப்படும்.

மூட்டுக்களை நீட்டி மடக்கும் சக்தி குறைந்து விடும் அதாவது மூட்டுக்களில் உள்ள எலும்புகளானது வலுவிழந்து இடம்மாறி செயற்படகூடியதாகவும் இருக்கும். உட்காருவதில் சிரமம் ஏற்படுவதோடு எழுந்து நடக்கும்போதும் சிரமமாக காணப்படும். இவ்வாறனவை மூட்டு வலியின் அறிகுறிகளாக காணப்படுகின்றன.

 

 

மூட்டுக்களுக்கிடையே வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதோடு அதனுடன சேர்த்து காய்ச்சல், இளைப்பு இடை குறைதல் போன்ற செயற்பாடுகளும் உடலில் நிகழும். இதனுடாக மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்படும் போது அதனை சரியான முறையில் இணங்கண்டு மருத்துவரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்க உடலில் கொலஸ்ட்ரால் அபாய கட்டத்தை தாண்டிருச்சாம்!

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...