மேயர் பிரியாவின் மாஸ் மூவ்… சென்னையில் இனிமே அந்த பிரச்சினை இருக்காது!

Date:

Share post:

மேயர் பிரியாவின் மாஸ் மூவ்… சென்னையில் இனிமே அந்த பிரச்சினை இருக்காது!

Mayor Priya’s Mass Move…Chennai will no longer have that problem!

சென்னையின் முதல் பெண் மேயராக பிரியா பெருமை பெற்றுள்ளார். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேயர் பிரியா ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அதில் முதலாவதாக இத்தாலி சென்று திடக்கழிவு மேலாண்மை குறித்து நேரில் பார்த்து அறிந்து கொண்டார்.

தற்போது சென்னை மாநகராட்சி கொடுங்கையூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைந்த செயல்பட நிலையங்கள் அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நாளை நடக்க உள்ளது.

இதில் பொதுமக்கள் அவர்களின் கருத்துக்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம் எனவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா சென்னையின் முதல் பெண் மேயராக பெருமையை பெற்றிருந்தார். மேலும் அவர் வெற்றி கரமாக அவருடைய பணிகளை செய்து வருகின்றார்.

அந்த வகையில் இலவச கழிப்பறை, சிங்கார சென்னை 2.0, மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பில் மாற்றம் என பல்வேறு புதிய திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அதனை அடுத்து மேயர் பிரியா ராஜன் திடக்கழிவு மேலாண்மை குறித்து தொழில்நுட்பத்தை அறியும் வண்ணம் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மேயர் பிரியா இத்தாலியை தேர்வு செய்து சென்றார்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முறை

அங்கு ரோம் மாநகரில் urbaser திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கும் குப்பைகளில் இருந்து எவ்வாறு மின்சாரம் தயாரிப்பது என்று புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் மூன்று நாடுகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முறை குறித்து அறிந்து கொண்டார்.

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையின் சவால்
அதனை தொடர்ந்து அவர் சென்னை திரும்பிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மிகவும் சவாலாக இருக்கின்றது.

இந்நிலையில் முதல்வரின் கனவு திட்டமான சிங்காரச் சொன்னார் 2.0 உருவாக்குவதில் திடக்கழிவு மேலாண்மை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதனால் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா நாடுகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மையை எவ்வாறு மேற்கொள்கின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...