காலாவதியான, பயன்படுத்தாத மாத்திரைகளை தூக்கி போடும் முன் கவனம் தேவை

Date:

Share post:

காலாவதியான, பயன்படுத்தாத மாத்திரைகளை தூக்கி போடும் முன் கவனம் தேவை

Care should be taken before discarding expired, unused tablets

மாத்திரைகளை மருந்துக் கடை உரிமையாளர் திரும்பி எடுத்துக் கொள்ள மறுக்கும் பட்சத்தில், அதை கழிவறையில் போட்டு, தண்ணீர் ஊற்றி கழுவிவிடலாம் என்ற பரிந்துரை முன்வைக்கபடுகிறது.

காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், பல்வலி போன்ற பொதுவான, இயல்பான உடல்நல பிரச்சினைகளுக்கு என்ன மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இருப்பதால் நாமே மருந்துக் கடைகளில் இருந்து மாத்திரைகளை வாங்கி வைத்து விடுகிறோம்.

அதேபோல, மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் மாத்திரைகளில் கூட சில நாட்கள் சாப்பிட்டுவிட்டு, எஞ்சியதை அப்படியே வைத்து விடுகிறோம்.

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை, இந்த மாத்திரைகள் வைத்திருக்கும் டப்பாவை ஆய்வு செய்து தேவையற்ற மருந்துகளை அப்புறப்படுத்தும் பழக்கம் பலரிடையே உள்ளது.

தூக்கி எறிய கூடாது..! காலாவதியான மாத்திரைகளை தூக்கி எறியாமல், அதை முறைப்படி அழிப்பதற்கான வழிமுறைகளை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருந்துக் கடைகள் அல்லது மருந்து உற்பத்தி மையங்களில் இந்த மருந்துகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர்களும் இதனை பெற்றுக் கொள்வர் என்றும் உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

கழிவறையில் போட்டு விடலாமா? மாத்திரைகளை மருந்துக் கடை உரிமையாளர் திரும்பி எடுத்துக் கொள்ள மறுக்கும் பட்சத்தில், அதை கழிவறையில் போட்டு, தண்ணீர் ஊற்றி கழுவிவிடலாம் என்ற பரிந்துரை முன்வைக்கபடுகிறது.

ஆனால், எல்லா மாத்திரைகளையும் இதுபோல கழிவறையில் வீச முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது கழிவுநீரில் சேர்ந்து மண்ணில் கலக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் ஷல்மாலி இனாம்தார் கூறுகையில், “buprenorphine, Fentanyl, Hydrocodone Hydromorphone, Meperidine, Oxycodone Methadone’’ போன்ற மாத்திரைகளை கழிவுநீரில் போட்டுவிடலாம்.

ஆனால், மற்ற மாத்திரைகளை இதுபோல கரைக்கலாம் என்றாலும், அவற்றை பேக்கிங்கில் இருந்து வெளியே எடுத்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்திருந்து பிறகு தூக்கி எறியலாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்படுகிறது.

பிராணிகள் உட்கொள்ளும் ஆபத்து... மருந்து, மாத்திரைகளை தூக்கி குப்பையில் எறியும்போது, குப்பையின் இடையே உணவுக் கழிவுகளை கிளறி சாப்பிடுகின்ற நாய், பூனை, மாடு போன்றவை இந்த மருந்து கழிவுகளையும் சேர்த்து உட்கொள்ளும் அபாயம் உள்ளது.

இது தவிர குப்பைகளை சிலர் நீர்நிலைகளை ஒட்டி தூக்கி எறிகின்றனர். மாத்திரைகள் நீரில் கலந்து நீர் அசுத்தம் அடைய வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அபாயம் நிறைந்த ஆண்டிபயாடிக்ஸ், பீடா பிளாக்கர்ஸ் மற்றும் இதர ரசாயனங்கள் சுற்றுப்புற பகுதிகளிலும், மக்கள் அருந்தும் குடிநீரிலும் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

விழிப்புணர்வு தேவை : காலாவதியான அல்லது பயன்படுத்தாத மாத்திரைகளை மிக பாதுகாப்பான முறையில் அழிப்பது குறித்து பொதுமக்களுக்கு இன்னும் கூடுதலான விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்று மருத்துவர் ஷல்மாலி தெரிவித்தார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...