தினமும் ஓட்ஸ் சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் நடக்கும்?

Date:

Share post:

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் நடக்கும்?

What changes will happen in the body if you eat oats daily?

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் என்பதை பார்க்கலாம்.

ஓட்ஸ் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது நல்லது ஆகும்.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால் நாள் முழுவதும் ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

ஆற்றல் அளவு

ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸுடன் நாளைத் தொடங்குவது உங்களுக்கு ஆற்றலைத் தரும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து இருப்பதால் மெதுவாக ஜீரணமாகும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

எடை குறைப்பு

நீங்கள் ஆரோக்கியமான எடையைப் பெற விரும்பினால் காலை உணவாக ஓட்ஸை எடுத்து கொள்ள வேண்டும். இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்து இருக்கீறது.

காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிடுவதை தவிர்க்க உதவும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி எளிதாக எடையைக் குறைக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கான் செரிமான ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைத் தடுக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. குடல் பாக்டீரியாக்களைப் பாதுகாக்கிறது.

இதயத்திற்கு நல்லது

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான அமைப்பில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த காலை உணவாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுக்கிறது. நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.

சத்துக்கள் 

இதில் நார்ச்சத்து மட்டுமின்றி உடலுக்குத் தேவையான சத்துக்களும் உள்ளன. பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி1 உடன் இணை கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. ஆற்றல் உற்பத்தி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாடு போன்ற உடல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...