சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்கனுமா..?

Date:

Share post:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்கனுமா..? இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!

Can people with diabetes lose weight? Follow these ways..!

சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 101 மில்லியன் (11.4 சதவீதம்) மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது எனவும், ஏறக்குறைய 136 மில்லியன் (15.3 சதவீதம்) மக்கள் ப்ரீடயாபிடீஸ் பாதிப்பை கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம், போன்றவை இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறி வருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்க்கரை நோயுடன் வாழ்வது என்பது மிகவும் சிரமமான விஷயமாகும். இதற்கான வாழ்க்கை முறை என்பது நாம் நினைப்பதை விடவும் கடினமாக இருக்கும்.

இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை இன்று சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அதை குறைப்பதும் மிக கடினமான ஒன்றாகும்.

ஏனெனில், உடல் எடையை குறைக்கும் போது சர்க்கரை அளவு உடலில் சீராக இருப்பதும் அவசியம். எனவே, எடை குறைக்கும் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை.

சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 101 மில்லியன் (11.4 சதவீதம்) மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது எனவும், ஏறக்குறைய 136 மில்லியன் (15.3 சதவீதம்) மக்கள் ப்ரீடயாபிடீஸ் பாதிப்பை கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு சிறப்பு மையத்தின் ஆய்வின் முதன்மை ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆர்.எம். அஞ்சனா மற்றும் டாக்டர் மோகன் ஆகியோர் மேலும், சர்க்கரை நோய் என்பது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரு பகுதியிலும் சமமான அளவே பாதிப்புகளை கொண்டுள்ளது.

இந்த சர்க்கரை நோயின் தற்போதைய பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் கூட ப்ரீடயாபிட்டீஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

அதே போன்று, ஒருவருக்கு ப்ரீ-டியாபிட்டீஸ் நிலை இருந்தால், அது முழுமையாக சர்க்கரை நோயாக மாறுவதன் விகிதம் வேகமாகி கொண்டே இருக்கும்.

இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்க்கரை நோயாளியாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சிக்கலான நோயை எதிர்க்க உடல் எடை என்பது பெரும் தடையாக பலருக்கும் உள்ளது.

இதை எளிதாக குறைக்க இந்த பதிவில் சில வழிமுறைகளை கூறயுள்ளோம். அவற்றை பின்பற்றி நலமாக வாழுங்கள்.

உணவு பழக்கம் :

சர்க்கரை நோயாளிகளின் உணவு பழக்கம் என்பது மிக மிக கவனமாக இருக்க வேண்டிய ஒன்று. எனவே, உங்களது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு வகைகளை அவசியம் சாப்பிட்டு வர வேண்டும்.

கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதன் மூலம், உடல் எடை சீரான அளவில் இருக்க வழி செய்யலாம்.

தினசரி உடற்பயிற்சி :

உடற்பயிற்சி என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்றியமையாத தினசரி பழக்கமாகும்.

இது கலோரிகளை குறைப்பதற்கு பெரிதும் உதவும். மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. எனவே, தொடர்ச்சியாக தினமும் உடற்பயிற்சி செய்து வரலாம்.

கலோரிகளின் எண்ணிக்கை :

ஒருவரின் உடலில் எடையை குறைக்க கலோரிகளின் எண்ணிக்கை என்பது முக்கிய அளவுகோலாகும்.

பல நேரங்களில் அதிக கலோரி உள்ள உணவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு விட்டால் அது அவர்களின் சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், உடல் எடையையும் கூட்டி விடும். எனவே, சாப்பிட கூடிய உணவில் எவ்வளவு கலோரிகள் உள்ளது என்பதை அறிந்துகொண்டு சாப்பிடுவது நல்லது.

நார்ச்சத்து உள்ள உணவுகள் :

பொதுவாக நமது உடலுக்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள் மிக அவசியமாகும்.

முட்டைக்கோஸ், வெந்தயக்கீரை, பாலக்கீரை, பாகற்காய் போன்ற நார்ச்சத்துள்ள உள்ள பச்சைக் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனால், உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

சிட்ரஸ் பழங்கள் :

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் மற்றும் தர்பூசணி போன்ற சிட்ரஸ் வகை பழங்களை சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்வது நல்லது.

மேலும், அதிக நீர்சத்து உள்ள வெள்ளரிக்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றையும் எடுத்து கொள்ளலாம். இது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க உதவும்.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன்னர், உங்களின் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...