நாள் முழுக்க மவுஸ் பிடித்து கை மணிக்கட்டு பகுதியில் வலிக்குதா..?

Date:

Share post:

நாள் முழுக்க மவுஸ் பிடித்து கை மணிக்கட்டு பகுதியில் வலிக்குதா..? இந்த பயிற்சியை செய்ய உடனே சரியாகும்..!

Do you have pain in your wrists after holding a mouse all day? It will be perfect to do this exercise immediately..!

கைகள் உறுதியாக இருக்க மணிக்கட்டுகள் தான் வலிமையாக இருக்க வேண்டும் என்ற தலைப்பில் அன்ஷுகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நம்மில் பலருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுவது..

அதிக நேரம் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்தபடியே வேலை பார்ப்பது முதல் வீட்டு வேலைகளை அதிக நேரம் செய்யும் போது மணிக்கட்டு பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும்.

இதனால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் அவதிப்படுவோம்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், வழக்கமான உடற்பயிற்சிகளோடு, மணிக்கட்டு வலியைக் குறைப்பதற்கு சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மணிக்கட்டு வலிக்குத் தீர்வு காணும் உடற்பயிற்சிகள்…

கைகள் உறுதியாக இருக்க மணிக்கட்டுகள் தான் வலிமையாக இருக்க வேண்டும் என்ற தலைப்பில் அன்ஷுகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முதலில் கைகளை நேராக நீட்டிக்கொள்ளவும். உள்ளங்கைகளில் விரல்களை அழுத்தி 10 தடவைக்கு மேல் மூடி மூடி திறக்க வேண்டும்.

குறிப்பாக நீங்கள் மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியேற்றும் போது, உங்களது கைகளைத் திறந்து விரல்களை அகலமாக விரித்து வைக்கவும்.

அடுத்ததாக உங்களது விரல்களை அனைத்தையும் மூடிக்கொண்டு மேலும், கீழும் மற்றும் கடிகார திசையில் சுமார் 10 முதல் 15 வினாடிகளுக்கு கைகளை சுழற்றவும்.

நீங்கள் இதை ஒவ்வொரு திசையிலும் 10 முறை செய்ய வேண்டும். முக்கியமாக இதை நீங்கள் கஷ்டப்பட்டு செய்ய கூடாது. அசால்ட்டாக நீங்கள் செய்யும் போது உங்களது கைகளுக்கு வலிகள் ஏற்படுவது குறையும்.

கைகளை திறந்து வைத்து மேல் மற்றும் கீழேயும், கடிகார திசையில் சுழற்றவும்.

உங்கள் முதுகை நேராகவும் தோள்களை தளர்வாகவும் வைத்து வசதியான நிலையில் உட்கார்ந்து அல்லது நின்று தொடங்க வேண்டும்.

கை குலுக்குவது போல உங்களது கைகளை சேர்த்து வைத்து கொண்டு கைகளை சுழற்றவும்.

தண்ணீரில் மீன் வளைந்து செல்வது போல உங்களது கைகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடப்பக்கம் கைகளை சுழற்றி நீங்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

இறுதியாக நீங்கள் பூனை போன்று கால்களை மடக்கி கொள்ளவும். உங்களது உள்ளங்கைகளை நன்றாக விரித்து நம் உடலைத் தாங்கிக் கொள்ளும் படி வைக்கவும்.

பின்னர் உடலை முழுவதுமாக சுற்ற வேண்டும் பொதுவாக நம்முடைய கைகளுக்கு மணிக்கட்டு பகுதி தான் மூல ஆதாரமாக உள்ளதால், மறக்காமல் தினமும் செய்யுமாறு அறிவுறுத்துகிறார் யோகா நிபுணரும், ஹோலிஸ்டிக் வெல்னஸ் நிபுணருமான அன்ஷுகா.

இந்த எளிய பயிற்சிகளை தினமும் மேற்கொள்வது மணிக்கட்டில் உள்ள தசைகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த, இயக்கத்தை அதிகரிக்க, காயங்களின் அபாயத்தைக் குறைக்க மற்றும் ஒட்டுமொத்த மணிக்கட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...