நீங்க மகிழ்ச்சியா இருக்க ஹாப்பி ஹார்மோன்தான் காரணம்

Date:

Share post:

நீங்க மகிழ்ச்சியா இருக்க ஹாப்பி ஹார்மோன்தான் காரணம்… இதை எப்படி அதிகரிப்பது..?

Happy hormone is the reason why you are happy… how to increase it..?

நாம் அன்றாடம் செய்யும் பல்வேறு செயல்கள் காரணமாக டோபமைன் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம்.

டோபமைன் அளவுகள் எப்பொழுது அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

நாம் ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருந்தாலோ அல்லது கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ நமக்கு எரிச்சல் ஏற்பட்டு, மனநிலை எவ்வாறு உடனடியாக மாறுகிறது என்பதை எப்பொழுதாவது கவனத்திருக்கிறீர்களா?

இதனை மன அழுத்தம், மகிழ்ச்சி அல்லது பிற உணர்ச்சிகளின் கலவையாக நாம் தொடர்புப்படுத்தி பார்த்தாலும் அறிவியல் பூர்வமாக இதற்கு முக்கிய காரணமாக இருப்பது டோப்பமைன் என்ற ஹாப்பி ஹார்மோன் ஆகும்.

நமது மூளையில் இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறான டோபமைன் நமக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

நமது தற்போதைய மனநிலைக்கும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு நமக்கு இருக்கக்கூடிய மனநிலைக்கும் இந்த ஹார்மோனே காரணம்.

வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கையும் கொண்டிருக்காத ஒரு நபர், எடுத்த காரியத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக பாதியிலேயே விட்டுவிட்ட ஒரு நபர், அயராது பாடுபட்டு நினைத்ததை முடித்த ஒரு நபர் மற்றும் எதையும் கண்டுகொள்ளாமல் நடப்பதை ஏற்றுக் கொள்ளும் ஒரு நபர் என்று பல்வேறு விதமான நபர்களை நாம் சந்தித்திருக்க கூடும்.

இந்த நபர்களின் மனநிலையில் இருக்கக்கூடிய மாற்றத்திற்கான முக்கிய காரணம் அவர்களின் டோபமைன் அளவுகள் தான்.

நாம் சாப்பிடுவது, நகர்வது அல்லது அன்றாடம் நாம் யோசிப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகள் காரணமாக டோபமைன் அளவுகள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம்.

நமது உடலில் தொடர்ச்சியாக சுழன்று கொண்டு இருக்கும் டோபமைன் அளவுகள் காரணமாகவே நமது மனநிலை அவ்வப்போது மாறுகிறது.

ஒரு சில நிகழ்வுகளுக்கு பின்னர் டோபமைன் வெளியிடப்படுகின்றன. ஏதேனும் இலக்குகளை அடைந்தாலோ அல்லது நாம் நினைத்த காரியத்தை முடித்தாலோ அந்த சமயத்தில் நமது மூளை இந்த ஹாப்பி ஹார்மோனை வெளியிடுகிறது.

இதன் காரணமாக நமக்கு திருப்தி உணர்வு ஏற்படுகிறது. மேலும் இதன் மூலமாக நமக்கு அதிக ஊக்கம் கிடைத்து, நீண்ட கால இலக்குகளை அமைத்து, அதை நோக்கிய பயணத்தை தொடர்கிறோம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...