ரேஷனில் தேசியக்கொடி வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறதா?

Date:

Share post:

ரேஷனில் தேசியக்கொடி வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறதா?

“நாட்டின் தேசியக்கொடி மட்டுமல்லாது, ஏழைகளின் சுயமரியாதையையும் பா.ஜ.க விற்கிறது” – ராகுல் காந்தி

இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், இந்திய அரசு (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி) திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் மூவர்ண கொடியுடன் குடிமக்களின் உறவு ஆழமடையும் என்றும் இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் அரசு கூறுகிறது.

தற்போதுவரை இந்தியக் குடிமக்களுக்கு தேசியக் கொடியுடனான உறவு, முறைசார்ந்த மற்றும் அமைப்புரீதி உறவாக மட்டுமே இருந்துவருகிறது.

மூவர்ணக்கொடி இயக்கம்

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இயக்கத்திற்குப்பிறகு இந்த உறவு தனிப்பட்டதாக மாறும் என்று இந்திய அரசு கருதுகிறது.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையில் குடிமக்கள் அனைவரும் ஒவ்வொருவரின் வீட்டிலும், அலுவலகத்திலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

அதைத் தொடர்ந்து தேசியக் கொடிகள் ரேஷன் கடைகளிலேயே விற்கப்படுகிறது.

வடமாநிலங்களில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்கள் தேசியக் கொடியை வாங்க கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், “தேசியக் கொடிக்காக மக்களிடம் 20 ரூபாய் கேட்டுக் கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது” எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஒருவர் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க வந்திருக்கிறார்.

அவரிடம் ஊழியர் கொடியை வாங்கக் கட்டாயப்படுத்துகிறார். ஆனால் அவரோ என்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது.

ரேஷன் பொருள்கள் வாங்க தான் பணம் இருக்கிறது எனக் கூறுகிறார்.

20 ரூபாய்க்கு தேசியக்கொடி

இந்த வீடியோக்கு பிறகு ராகுல் காந்தி, “ரேஷன் கடைகளில் ஏழை மக்களிடம் 20 ரூபாய்க்கு தேசியக்கொடி வாங்கக் கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது.

நமது நாட்டுக் கொடியும் தேசப்பற்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது. எப்போதும் தேசப்பற்றை விற்க முடியாது.

நம் நாட்டின் தேசியக் கொடி மட்டுமல்லாது, ஏழைகளின் சுயமரியாதையையும் பா.ஜ.க விற்கிறது” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்திருக்கிறது.

அதில் நாடு முழுவதும் மாதந்தோறும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், தேசியக் கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

தேசியக் கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிப்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பான சர்ச்சை

இந்த திட்டம் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கு மேல் உள்ளது. ஆனால் இது தொடர்பாக இரண்டு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

முதல் சர்ச்சை ஜம்மு காஷ்மீரில் ஒரு மாவட்டத்தின் கல்வித் துறையின் உத்தரவு தொடர்பானது.

இந்த இயக்கத்தை வெற்றியடைய செய்யவேண்டும் என்ற வகையில், பட்காம் மண்டல கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளதால், அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான அரசியல் தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...