இலவசங்களை நிறுத்த உத்தரவிட முடியாது

Date:

Share post:

இலவசங்களை நிறுத்த உத்தரவிட முடியாது

இலவசங்கள் வழங்க கூடாது என உத்தரவிட முடியாது- கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய இயலாது: உச்சநீதிமன்றம்

இலவசங்களை வழங்கக் கூடாது என கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலவசத் திட்டங்களுக்கு தடையா?

தேர்தல் காலங்களில் இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த பொதுநலன் வழக்கு.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் கடந்த 3-ந் தேதி விசாரித்தது.

ஆம் ஆத்மி கட்சி மனுத்தாக்கல்

இந்த விசாரணையின் போது, இலவசங்களை வழங்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட

அனைத்து தரப்பும் தங்களது கருத்துகளை ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவில், இலவசங்கள் என்பது ஏழைகளுக்கு உதவக் கூடியது.

ஆகையால்தான் இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.

இதனை நீதிமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நிலை வந்திருப்பது வருத்தம் தருகிறது.

இது தொடர்பாக குழு அமைத்தால் மாநில அரசுகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, இலவசங்களைக் கொடுக்க கூடாது என அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது.

இலவசங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கலாம்.

சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் பிராமண பத்திரம் தாக்கல் செய்தது.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி; இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல்.

ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம். இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.

இலவசங்களை அறிவிக்கின்றன என்பதற்காக அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய முடியாது.

ஜனநாயக விரோதமாகும்

அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்வது ஜனநாயக விரோதமாகும். இலவசங்களுக்காக நிதி ஒதுக்கீடு;

மக்கள் நலத் திட்டங்கள் என்பவை சமன் செய்யப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது என்பது சீரியசான விஷயம்தான் என கூறியது

மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது. அரசு வழங்கும் இலவசங்கள் பல நேரத்தில் உயிர்காக்கும் அம்சங்களாக உள்ளன.

இலவசங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி,

இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான அரசியல் தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...