மனதை கட்டுப்படுத்துவோம் !

Date:

Share post:

மனதை கட்டுப்படுத்துவோம் !

மனதை

 

இன்றைய நவ நாகரிக உலகத்தில் நாம் இயந்திரம் போன்று சிறு இடை வேளையின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம். எதற்காக? என்று வினா எழுப்பினால் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் என்று பதில் வரும்.

அதே சமயம் நம்மில் பெரும்பாலானோர் குடும்பத்திற்காக உழைக்கிறோம் என்ற மனநிறைவு இருந்தாலும், ஒரு வித மன அழுத்தத்தோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அப்படிப்பட்ட மன அழுத்தமான வாழ்க்கை இல்லாமல் நல்லதொரு மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக…

 

கட்டுப்படுத்துவோம்

 

மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு தனியார் நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய சூழலில் அனைத்துத் துறை மற்றும் பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உலவி கொண்டிருக்கிறார்கள்.

இதுவே மன அழுத்தத்தை நாம் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

எதிர்பார்ப்புகள் குறைவதால், மனஅழுத்தமும் பெருமளவில் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலை பளு… இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும்.

சிலருக்கு அதிகளவு வெளிச்சம், சத்தம் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தும். விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் அழைத்து செல்லும்.

அதில் முதல் முக்கிய காரணி பணப்பிரச்னை. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணம் ேவலை செய்யும் இடம், அடுத்து உறவினர்கள்.

சில நேரங்களில் நெருங்கிய உறவினர்களே மன அழுத்தத்தை தோற்றுவிப்பார்கள். இவை தவிர முறையற்ற உணவு, போதை பழக்கம், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

முதுமை மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மன அழுத்தத்தினை சந்திப்பார்கள். இவர்கள் இருவருக்கும் அன்பான உபசரிப்பு தான் தேவை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

என்ன செய்யலாம்

*உடற்பயிற்சி மன அழுத்தத்தை போக்க மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொண்டால், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது.

உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும் போது எண்டோர்பின்ஸ் போன்ற நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கும்.

*எவ்வளவு வேலை இருந்தாலும், உங்களுக்கான சில மணி நேரம் ஒதுக்குவது அவசியம். அது உங்களின் உடல் மனம் அனைத்தையும் அமைதிப்படுத்தும்.

*தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தலாம்.

*ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியை தினந்தோறும் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும்.

*முறையான உணவுப்பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகள், கீரை உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

*தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

*7 முதல் 8 மணி நேரம் உறக்கம் அவசியம். உறங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டால், புத்தகங்கள் படிக்கலாம், மனதை ரம்மியமாக்கும் இசை கேட்கலாம். அப்படியும் பிச்னை நீடித்தால் டாக்டரின் ஆலோசனை பெறுவது நல்லது.

 

மழைக்கால உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/21/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...