மழைக்கால உணவுகள்

Date:

Share post:

மழைக்கால உணவுகள்

மழைக்கால

ஐப்பசியை தொடர்ந்து மழைக்கால மற்றும் குளிர்காலம் என தமிழகம் முழுவதும் மிகவும் இதமான தட்பவெப்பம் இருக்கும்.

வெயிலின் தாக்கம் குறைவதால், மனதுக்கு மட்டுமில்லை உடலும் ஒருவித மந்தமான நிலையில் இருக்கும்.

இந்த ரம்மியமான சூழலை நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்க நம்முடைய உணவிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

காரணம், தட்ப வெப்ப மாற்றத்தினால் முதலில் நாம் அவதிப்படுவது அஜீரண பிரச்னை.

மழைக்கால கட்டத்தில் ஜீரண சக்தி குறைந்து, செரிமான பிரச்னை ஏற்படும்.

அதைத் தவிர்க்க, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட பழக வேண்டும். மேலும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள பூண்டு, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.மழைக் காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும்.

எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதை தீர்க்க சில உணவு வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

மழைக்கால உணவு வழிமுறைகள்

*மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

*கண்டிப்பாக நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

*சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் ‘சி’ சத்து நிறைந்த எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் ஒத்துக் கொள்ளும். சிலருக்கு இவை ஒத்துக் கொள்ளாது. சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது என்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்க்க வேண்டும்.

*மழைக் காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

*எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டுமென்று தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம்.

 

மேலும்

 

நாம் தினமும் சாப்பிடும் உணவையே சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும். எண்ணெயில் பொரிக்கப்படும் உணவைத் தவிர்த்து நீராவியில் தயார் செய்யும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

*எந்த உணவாக இருந்தாலும், அதை சூடாக சாப்பிட வேண்டும். தண்ணீர் கூட வெதுவெதுப்பாக பருக வேண்டும்.

*வீட்டிலேயே நிலவேம்பு  கஷாயத்தினை காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து குடித்து வர நோய் தொற்று எதுவும் ஏற்படாது. பனியால் தோன்றும் பல நோய்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.

*ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு இவற்றை தவிர்த்து காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு களை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

*மழைக் காலங்களில் காய்கறிகளையும், கீரைகளையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். கீரைகளை சமைக்கும் போது  நன்கு சுத்தப்படுத்தி செய்ய வேண்டும். ஆனால், நீர்ச்சத்து மிக்க காய்கறிகளான வெள்ளரி, பூசணி, புடலை, பீர்க்கன், சுரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்

*பூமிக்கு அடியில் இருந்து பெறப்படும் உணவுகளையோ அல்லது பூமிக்கு மிக நெருக்கத்தில் உள்ள காய்களையோ தவிர்த்து மண்ணிலிருந்து உயரத்தில் வளர்ந்து இருக்கக்கூடிய கீரைகளையோ காய்கனிகளையோ சாப்பிடலாம்.

*மதிய உணவுடன்  அவ்வப்போது தூதுவளை ரசம், மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்கள். இது செரிமானத்திற்கு உதவுவதுடன் ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை அருகில் வர விடாது.

*மோர் தவிர இதர பால் பொருட்களான தயிர், வெண்ணெய் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும்.

*மழைக் காலங்களிலும் பழங்கள் சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். எல்லா சீசனுக்கும் பொருத்தமான பழங்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, சிட்ரஸ் சத்து நிறைந்த எலுமிச்சம், ஆரஞ்சு போன்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

*இரவு தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து இளம் சூட்டில் குடிப்பது நல்லது.

*அசைவ உணவாக இருப்பின் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் சமையலறையில்தான் உள்ளது. மழைக்காலமோ, பனி காலமோ முறையான உணவுப்பழக்கம் இருந்தால் பல நோய் தொற்றுக்களை தவிர்த்துவிட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்  கொள்ளலாம்.

 

தொண்டை வலி (Throat infection) பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/19/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-throat-infection/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...