ஆபரேஷன் செய்து எடை குறைத்தேனா: ஹன்சிகா கோபம்

Date:

Share post:

ஆபரேஷன் செய்து எடை குறைத்தேனா: ஹன்சிகா கோபம்

Did I lose weight after surgery: Hansika angry

ஆபரேஷன் மூலம் உடம்பை குறைத்து விட்டு, யோகா செய்து உடம்பை குறைத்ததாக ஹன்சிகா பொய் சொல்கிறார் என நெட்டிசன் ஒருவர் பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு நடிகை ஹன்சிகா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. இவர் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொழுகொழுவென ஹன்சிகா இருந்த நிலையில் தற்போது ஸ்லிம்மாக மாறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான் தொடர்ந்து யோகா செய்வதால் தான் உடல் எடை குறைந்தது என்று ஹன்சிகா கூறி உள்ள நிலையில் நெட்டிசன் ஒருவர் அவரது இந்த கருத்தை கேலி செய்துள்ளார்.

ஆபரேஷன் மூலம் உடம்பை குறைத்து விட்டு யோகாவால் உடம்பு குறைந்ததாக ஹன்சிகா பொய் சொல்கிறார் என பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த ஹன்சிகா, ‘நான் என்னுடைய உடலை குறைப்பதற்கு கடினமாக உழைத்து இருக்கிறேன்.

அதில் யோகாவும் ஒன்று. இதில் ஒரு ஜாலியான விஷயம் என்னவென்றால் யோகா வெறுப்புகளுக்கு நேர்மறையான விஷயங்களை பரப்ப உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிலடிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...