கருவலையம் ஏன் வருது தெரியுமா

Date:

Share post:

கருவலையம் ஏன் வருது தெரியுமா..? இதை தெரிஞ்சுக்கிட்டாதான் வராம தடுக்க முடியும்..!

Do you know why the womb comes?

உங்களுக்கு கருவளையமோ அல்லது கண்களுக்கு கீழ் வீக்கமோ இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, போதிய அளவு தூங்காமல் இருப்பது, சரியான உணவுமுறை பின்பற்றாத சூழல் போன்றவை பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதில் குறிப்பாக, தூக்கமின்மை உடனடியாக முகத்தில் தெரியும். குறிப்பாக, கருவளையம் மற்றும் வீக்கமான கண்கள் ஆகிய இரண்டுமே பரபரப்பாக வேலை செய்யும் பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது.

ஒரு பக்கம் பிசியான வாழ்க்கை முறை இதற்கு காரணமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் ஒரு சில காரணங்களால் ரத்த நாளங்கள் டைலூட் ஆகி, கருவளையத்தை உண்டாக்குகிறது.

உங்களுக்கு கருவளையமோ அல்லது கண்களுக்கு கீழ் வீக்கமோ இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.

இது தவிர ஸ்கின் கேர், ஹேர் கேர் போல ஐ-கேர் அதாவது கண்களையும் பரமாரிப்பது, அதற்காக ஒரு ரொட்டீனைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். இந்த சூழ்நிலையில், கருவளையம் மற்றும் கண்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க ஒரு சில டிப்ஸ்.

கருவளையம் ஏன் ஏற்படுகிறது? கருவளையம் ஏற்படுவதற்கான முதல் காரணம், போதிய அளவு தூங்காமல் இருப்பது தான்.

சரியாக அல்லது உங்கள் உடலுக்கு தேவைப்படும் அளவுக்கு தூங்காமல் இருந்தால், கண்களைச் சுற்றி இருக்கும் ரத்த நாளங்கள் விரிந்து, ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

மேலும், கண்களைச் சுற்றி இருக்கும் சருமம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அதிகப்படியான ரத்த ஓட்டம் வெளிப்படையாகத் தெரியும்.

ஹைப்பர் பிக்மண்டேஷன்: உங்கள் உடல் இயற்கையாகவே அதிகமாக மெலனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்தால் கண்களில் கருவளையம் ஏற்படக்கூடிய சாத்தியமே இருக்கிறது.

மெலனின் என்பது நம் உடலை அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பாதுகாக்கும், அதே நேரத்தில் கருவளத்தையும் உண்டாக்கும்.

கொழுப்புத் திசுக்கள் குறைவு: ஒரு சிலருக்கு இயற்கையாகவோ அல்லது உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் காரணமாகவோ சருமம் மிகவும் மெல்லியதாக இருக்கும் அல்லது கண்களுக்கு கீழேயே குறைவான கொழுப்புத் திசுக்கள் இருக்கும்.

ஏற்கனவே மேலே கூறியது போல சருமம் மெல்லியதாக இருக்கும் பொழுது அந்த பகுதிகளில் ரத்த நாளங்கள் விரிவடைந்து கருவளையம் ஏற்படும்.

இரும்புச்சத்து குறைப்பாடு: இரும்புச்சத்து குறைபாடு உடலில் பல விதங்களாக வெளிப்படும். அனீமியா என்று கூறப்படும் இந்த சத்து குறைபாடு உடலில் போதிய அளவு ரெட் பிளட் செல்ஸ் இல்லாததால் ஏற்படுகிறது.

இந்த செல்கள் உடல் முழுவதும் ரத்தத்தில் ஆக்சிஜனை கொண்டு செல்ல ஹிமோகுளோபின்-ஐ பயன்படுத்துகிறது. சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருக்கும் பொழுது கண்களுக்கும் ரத்தஓட்டம் குறையும். எனவே இயற்கையாக முகம் பொலிவிழந்து, கண்கள் சோர்வாகக் காணப்படும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...