வீடு மனை யோகம் தந்தருளுவார் பேரூர் முருகன்

Date:

Share post:

வீடு மனை யோகம் தந்தருளுவார் பேரூர் முருகன்

Perur Murugan will give house to house yoga

மேற்கு நோக்கிய நிலையில் காட்சி தரும் பேரூர் முருகனை வணங்கி வந்தால், நம் பிரச்சினைகளும் சிக்கல்களும் தீரும் என்பது ஐதீகம். வீடு மனை யோகம் தந்தருளுவார் என்கின்றனர் பக்தர்கள்.

பொதுவாகவே முருகப்பெருமான், கிழக்கு நோக்கிய நிலையில் காட்சி தரும் ஆலயங்களே அதிகம். கோயிலும் கிழக்கு பார்த்திருக்க, முருகக் கடவுளும் கிழக்குப் பார்த்தபடி கோஷ்டத்தில் இருப்பதே வழக்கம்.

கோயம்புத்தூரில் உள்ள மிக முக்கிய தலமான பேரூரில் முருகப் பெருமான் கோலோச்சுகிற ஆலயம், வெகு பிரசித்தம். புராண – புராதனச் சிறப்புமிக்க திருத்தலம் இது.

தலத்தின் இறைவன் சிவபெருமான். சுவாமியின் திருநாமம் பட்டீஸ்வரர். பேரூர் திருத்தலத்தில் விநாயகப் பெருமானும் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார்.

அதேபோல் ஆடல்வல்லான் என்று போற்றப்படும் நடராஜர் அழகு ததும்பக் காட்சி தருகிறார்.

கோயிலின் ஒவ்வொரு மண்டபமும் மண்டபத்தின் தூண்களும் தூண்களில் உள்ள சிற்பங்களும் நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.

அத்தனை கலை நயம் மிக்க ஆலயம் இது.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில், முருகபெருமான் தனிக்கோயில் போல் சந்நிதி கொண்டிருக்கிறார். முருகன் என்றாலே அழகன்தானே!

இந்தத் திருத்தலத்தில், முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீபால தண்டாயுதபாணி.

இந்த சந்நிதிக்கு வந்து, முருகப்பெருமானை கண் குளிரத் தரிசித்து திருப்புகழ் பாடி பேரானந்தம் கொண்டிருக்கிறார் அருணகிரிநாதர் பெருமான்.

பதினெட்டு சித்தர் பெருமக்களில் ஒருவரான கோரக்கருக்கும் இந்தக் கோயிலுக்கும் தொடர்பு உண்டு என்கிறது ஸ்தல புராணம்.

இங்குள்ள பால தண்டாயுதபாணியை பிரதிஷ்டைசெய்து கடும் தவம் மேற்கொண்டுள்ளார் கோரக்கர் முனிவர் என்கிறது ஸ்தல புராணம்.

பழநி மலையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். இப்படி மேற்குப் பார்த்தபடி முருகக் கடவுள் திருக்காட்சி தரும் திருத்தலங்கள் அரிது.

இதையடுத்து மேற்கு பார்த்த நிலையில் பேரூர் கோயிலில் தரிசனம் தந்தருள்கிறார் பால தண்டாயுதபாணியாக!

இப்படி மேற்குப் பார்த்த நிலையில் உள்ள முருகக் கடவுளைத் தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள், இந்தத் தலத்தில் ரொம்பவே விசேஷமானது. அதேபோல், மாத சஷ்டியிலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

பேரூர் பால தண்டாயுதபாணிப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமணம் முதலான சுபகாரியங்கள் தடையின்றி நிகழும் என்கிறார்கள் முருக பக்தர்கள்!

திருமணமான பெண்கள் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பாலதண்டாயுதபாணியை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

தொடர்ந்து ஆறு கிருத்திகைகள் வந்து விரதமிருந்து கந்தபெருமானை தரிசித்து பிரார்த்தனை நிறைவேறியதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள் என்கிறார் சுப்ரமணிய குருக்கள்.

ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போல் மாதந்தோறும் வருகிற எல்லா கிருத்திகை நட்சத்திர நாளும் இங்கே விசேஷம்தான்.

கிருத்திகை நட்சத்திர நாளில், செவ்வாய்க்கிழமைகளில், சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகித்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

பாதியில் நின்ற வீடு கட்டும் பணிகள், தடையில்லாமல் நடந்தேறும் என்பது நம்பிக்கை.

வீடு மனை யோகம் தந்து, முன் ஜென்ம வினைகளையும் தீர்த்து வைக்கும் பேரூர் முருகனைத் தொழுவோம்.

மனதாரப் பிரார்த்திப்போம். நமக்கு இதுவரை இருந்த, தொல்லைகளை யெல்லாம் அகற்றித் தந்தருளுவார் பால தண்டாயுதபாணி.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...