இன்று (ஜூன் 22) உங்கள் ராசியின் பலன்

Date:

Share post:

இன்று (ஜூன் 22) உங்கள் ராசியின் பலன்

Today (June 22) your zodiac sign

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ…

மேஷம்:

இன்று உங்களது நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துங்கள், வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

எல்லாவற்றையும் விட உங்கள் உள்ளுணர்வை இன்று அதிகம் நம்புங்கள். நிதி ஆதாயங்கள் கூடும் என்றாலும் ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும்.

அர்த்தமுள்ள விஷயங்களை பற்றி பேசுவதன் மூலம் உங்கள் நண்பர்களுடன் பிணைப்பை வலுப்படுத்துங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளிக்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் – லேபிஸ் லாசுலி கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – நீலம்

அதிர்ஷ்ட எண் – 15

ரிஷபம்:

உங்கள் உறவுகளை வலுப்படுத்த நீங்கள் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டிய சூழல் ஏற்படும்.

பணியிடங்களில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் பொறுமையாக இருங்கள்.

தேவையான நேரத்தில் ஆதரவு தேவைப்படும் நபருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் நட்பி வட்டாரத்தை பெருக்கி கொள்ளுங்கள்.

புதிய முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன் அதனை பற்றி முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – ஹவ்லைட் கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – சில்வர்

அதிர்ஷ்ட எண் – 7

மிதுனம்:

இன்று உங்கள் வழியில் வரும் புதிய யோசனைகள் மற்றும் திட்டங்களை தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள்.

உங்களது விரைவான சிந்திக்கும் திறன் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க உங்களுக்கு பெரிதும் உதவும்.

இன்று நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். சமயோஜிதமாக செயல்படாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – ஹெமாடைட் கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் – 3

கடகம்:

உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அக்கறை மற்றும் இரக்கத்துடன் நீங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இன்று தேவையின்றி அதிக செலவு செய்வதைத் தவிர்த்து, முதலீடு திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்களை அணுகி மீண்டும் இணையும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

அவசர முடிவுகளை எடுக்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் – சன் ஸ்டோன்

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

அதிர்ஷ்ட எண் – 50

சிம்மம்:

உங்கள் வாழ்க்கை துணையிடம் உங்கள் அன்பையும் அக்கறையையும் இன்று வெளிப்படுத்துங்கள்.

உங்கள் தலைமைத்துவ திறன்கள் இன்று அதிகரிக்கும் என்பதால், உங்கள் முன் வரும் சவால்களை நம்பிக்கையுடன் ஏற்று கொள்ளுங்கள்.

பணியிடத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவராக இருப்பீர்கள். இன்று உங்கள் ஆதரவு தேவைப்படும் நண்பர்களை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – ப்ளூ சஃபையர்

அதிர்ஷ்ட நிறம் – நியான் கிரீன்

அதிர்ஷ்ட எண் – 22

கன்னி:

உங்கள் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துவது மற்றும் தேவையற்ற கவன சிதறல்களைத் தவிர்ப்பது எளிதாக வெற்றி பெற உதவும்.

உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இன்று நிதி ரீதியாக சீரான நாளாக உங்களுக்கு அமையும்.

எனினும் நிதி சார்ந்த உங்களது பல தனிப்பட்ட விஷயங்களை பிறரிடம் கூறுவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் – கார்னெட் கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – மஸ்ட்டர்ட்

அதிர்ஷ்ட எண் – 14

துலாம்:

கடந்த கால அல்லது தற்போது நிலவி வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வெளிப்படையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுங்கள் மற்றும் ராஜதந்திர அணுகுமுறையை பின்பற்றுங்கள்.

உங்களது படைப்பாற்றல் திறன் மூலம் இன்று அதிர்ஷ்டத்தை அனுபவிப்பீர்கள். முதலீடு விஷயங்களில் கவனம் தேவை. செலவுகளை புத்திசாலித்தனமாக செய்வது நஷ்டத்தை தவிர்க்க உதவும்.

அதிர்ஷ்ட அடையாளம் – டைகர் ஐ கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – கிரிம்சன்

அதிர்ஷ்ட எண் – 9

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு சவலால் நிறைந்த நாளாக இருக்கலாம். உங்கள் உள் வலிமை மற்றும் மன உறுதியை கொன்டு வழியில் வரும் தடைகளை முறியடிப்பீர்கள்.

இன்று நீங்கள் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் பணத்தை செலவழிக்காதீர்கள்.

உங்கள் நெருங்கிய நண்பருக்கு இன்று நீங்கள் பக்கபலமாக துணை நிற்பீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – புஷ்பராகம் கல்

அதிர்ஷ்ட நிறம் – பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண் – 24

தனுசு:

உங்கள் அன்புக்குரியவர்களுடன் இன்று நீங்கள் உற்சாகமாக நேரம் செலவிடுவார்கள் இதனால் உங்களுக்கு மறக்க முடியாத இனிய நினைவுகள் இன்று உருவாகும்.

புதிய வாய்ப்புகளை ஏற்று கொண்டு உங்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுங்கள்.

நிதி விவகாரங்களைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை. முதலீட்டு வாய்ப்புகளை முழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்மோக்கி குவார்ட்ஸ் கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – கிரே

அதிர்ஷ்ட எண் – 49

மகரம்:

இன்று உங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலரிடம் விசுவாச உணர்வையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துங்கள்.

இன்று உங்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் எதிர்பார்க்கும் விஷயங்களில் சாதகமான முடிவுகளை தரும்.

இன்று வேலைக்கு எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறீர்களோ பிற்பாதியில் அதே அளவு உங்கள் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓய்வெடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – ஒயிட் ஓபல் கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – லாவெண்டர்

அதிர்ஷ்ட எண் – 12

கும்பம்:

பணியிடங்களில் அல்லது வியாபாரத்தில் நீங்கள் வழங்கும் தனித்துவமான யோசனைகள் உங்கள் வெற்றிக்கும் அங்கீகாரத்திற்கும் உதவும்.

இன்று பட்ஜெட் போட்டு அதன்படி செலவு செய்வது உங்கள் கையிருப்பில் நிதி ஸ்திரத்தன்மையை அளிக்கும்.

இன்று சமூக பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடு செய்யும் முன் சிறப்பான பலன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த தொழில்முறை நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – கார்னிலியன் கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – வயலட்

அதிர்ஷ்ட எண் – 8

மீனம்:

ரிலேஷன்ஷிப் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது உங்கள் உள்ளுணர்வு சொல்வதை நம்புங்கள். இன்று பணத்தை செலவிடுவதால் கவனம் தேவை.

சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதி பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியத்தையும் பார்த்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.

இன்று உங்களிடமிருந்து வெளிப்படும் படைப்பாற்றல் உங்களுக்கான மதிப்பை அதிகரிக்க கூடும்.

அதிர்ஷ்ட அடையாளம் – எமரால்டு கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

அதிர்ஷ்ட எண் – 19

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...