சர்வதேச யோகா தினம் 2023 – கவலையை கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்கள் இவை

Date:

Share post:

சர்வதேச யோகா தினம் 2023 – கவலையை கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்கள் இவை

International Yoga Day 2023 – These are yoga poses that help control anxiety

இந்த யோகாசனங்களால் நம் மனம் ஒருங்கிணைக்கப்படுவதால், வேறு சிந்தனைகளின் குறுக்கீடு இல்லாமல் போகிறது. இதனால் மனதில் உள்ள கவலைகள் மறைந்து நிம்மதி பெருகும்.

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி, கொண்டாடப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் யோகா தினம் குறித்து மாபெரும் அளவிலான விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக, இதன் மூலம் கிடைக்கும் பலன்களை அநேக மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

இருப்பினும், யோகா தினம் கொண்டாடப்பட இவ்வேளையில், மீண்டும் அதன் சிறப்புகளை நினைவுகூர்வது அவசியமாகிறது.

யோக பயிற்சிகளை செய்தால் உடல் நலன் மட்டுமன்றி நமது மன நலனும் மேம்படுகிறது.

பரபரப்பு மிகுந்த நம் மனதில் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துவதற்கு இது உதவியாக அமையும். உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, மனதை இலகுவாக்க யோகாசனம் பேருதவியாக இருக்கும்.

எப்போதெல்லாம் யோக பயிற்சிகளை செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இவ்வாறு நம் மனம் ஒருங்கிணைக்கப்படுவதால், வேறு சிந்தனைகளின் குறுக்கீடு இல்லாமல் போகிறது.

இதனால் மனதில் உள்ள கவலைகள் மறைந்து நிம்மதி பெருகும். அதற்கு ஏதுவான யோகா பயிற்சிகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பாலாசனா : இந்த ஆசனத்தை செய்தால் நம் மனதில் உள்ள பாரம் குறையும். மனம் இலகுவாகும்.

நம் பின்பக்க தலை மற்றும் தோள்பட்டைகளில் உள்ள வலி, பிடிப்புகளை நீக்கி, ஒரு வித அமைதியை ஏற்படுத்தும். எந்த சமயத்திலும் இந்த ஆசனத்தை நீங்கள் செய்யலாம்.

விபரீத கரனை : உங்கள் கால்கள் இரண்டையும் செங்குத்தாக மேல் நோக்கி தூக்கிச் சென்று சுவற்றின் மீது வைத்துக் கொள்ளலாம்.

உது உங்கள் உடல் முழுவதிலும் உள்ள ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கிறது மற்றும் மன நிம்மதியை தருகிறது. சாப்பிட்டு முடித்த வேளைகளில் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்து விட வேண்டும்.

மஜர்யாசனா – பிடிலாசனா : நம் முதுகு மற்றும் பின்பக்கத்தை ஆர்ச் போல வளைப்பது, வட்டமடிப்பது போன்ற செய்கைகளைக் கொண்டதாக இந்தப் பயிற்சி உள்ளது.

உங்கள் முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி, சோர்வு போன்றவற்றை நீக்கி புத்துணர்ச்சி தரக் கூடியதாகும். மூச்சு விடுவது இலகுவாக இருக்கும், இதனால் நரம்பு மண்டலம் ரிலாக்ஸ் ஆகும்.

உட்டாசனா : பின்பிக்கக் கழுத்து, தோள்பட்டைகள் மற்றும் முதுகு போன்ற பகுதிகளில் உள்ள வலி நீங்குவதற்கும், அதைத் தொடர்ந்து மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கவும் இந்தப் பயிற்சி உதவியாக அமையும். இது ஆழ்மன அமைதியை ஏற்படுத்தும்.

சேது பந்தாசனா : உடலில் உள்ள களைப்பு, சோர்வு போன்றவற்றை நீக்குவதுடன், மனதில் நிம்மதியை ஏற்படுத்த இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும். நம்மை சுற்றி நடக்கும் அனைத்துமே நல்லதாகவே நடக்கிறது என்ற ஊக்கத்தை இது கொடுக்கும்.

பட்சிமோதாசனா : நம் முதுகு முதல் பாதம் வரையில் உள்ள வலியை முற்றிலுமாக நீக்கக் கூடியது இந்த ஆசனம். முழு உடலும் ஸ்ட்ரெட்ச் ஆகும் இந்த ஆசனத்தை பயிற்சி செய்வது மனதில் உள்ள கவலைகளை நீக்கி புத்துணர்ச்சி தரும். காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த ஆசனத்தை செய்யலாம்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...