செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

Date:

Share post:

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

Senthil Balaji case: The Supreme Court rejected the request of the enforcement department!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், அமலாக்கத்துறையின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டது.

அதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி தந்ததை எதிர்த்தும், மருத்துவமனைக்கு வெளியே அழைத்து செல்லக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்புடையதல்ல என்றார்.

சாதாரண மனிதனுக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படாது என்றும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம் தவறான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாகவும் முறையிட்டார்.

ஆனால், உயர்நீதிமன்றத்தை தற்போதைய நிலையில் சந்தேகிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் முன்பு மீண்டும் முறையிடலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால், கைது செய்யப்பட்டு முதல் 15 நாட்கள் விசாரணைக்கு மிகவும் முக்கியமானவை என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்வியாக உள்ளதாகவும், விசாரணையை தாமதப்படுத்த இதுபோன்ற செயல்பாடுகளை செய்திருப்பதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், இதயத்தில் உள்ள 4 அடைப்புகளை போலியாக காட்ட முடியுமா என செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மீண்டும் மருத்துவக்குழு அமைத்து செந்தில் பாலாஜியை ஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளதாகக் கூறினர்.

அமர்வு நீதிமன்றமும், உயர்நீதிமன்றம் கஸ்டடி குறித்த விசாரணையை நடத்தி வரும் நிலையில்,  அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், அமலாக்கத்துறையின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...