10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Date:

Share post:

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Chance of rain in 10 districts in next 3 hours

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கிழக்கு திசை காற் றும் மேற்கு திசை காற்றும் இணையும் நிகழ்வு நீடித்து வருவதால் நாளையும், நாளை மறுநாளும் தமிழ் நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிந்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வங்கக் கடலில் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமையான சூழல் நிலவியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

குறிப்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கி நேற்றும் நீடித்தது. இதன் காரணமாக சென்னை, மற்றும் புறநகர், சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வரும் இந்த பருவகாலத்தில் தமிழ்நாட்டில் அதிகளவில் மழை பெய்வது அரிதான ஒன்று என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...