அசிடிட்டி, மைக்ரேன் தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மூலிகை டீ.!

Date:

Share post:

அசிடிட்டி, மைக்ரேன் தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மூலிகை டீ.!

Herbal tea that solves problems like acidity, migraine headache, nausea!

டீ, காஃபிக்கு மாற்றாக மூலிகை டீ ஒன்றை எடுத்துக் கொண்டால் அது அசிடிட்டி, மைக்ரேன் தலைவலி போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதாக அமையும்.

அதிகாலையில் எழுந்து பல் துலக்கி முடித்தவுடனே நம் மனம் சூடான டீ அல்லது காஃபி அருந்துவதையே விரும்பும். 100இல் 90 சதவீதம் பேருக்கு இதுதான் பழக்கமாக இருக்கும். எஞ்சிய சிலர்தான் டீ, காஃபி போன்ற பானங்களை விரும்பாமல் இருப்பார்கள். அதே சமயம், அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சினை இருப்பவர்களும் டீ, காஃபி அருந்துவதை தவிர்ப்பார்கள்.

குறிப்பாக காலையில் காஃபி அருந்தினால் ஏற்கனவே அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடலில் மென்மேலும் அழற்சி ஏற்படும். இது மட்டுமல்லாமல் ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படும். இதனால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், பித்தம் போன்ற தொல்லைகள் அதிகரிக்கலாம்.

இருப்பினும், டீ, காஃபிக்கு மாற்றாக மூலிகை டீ ஒன்றை எடுத்துக் கொண்டால் அது அசிடிட்டி, மைக்ரேன் தலைவலி போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதாக அமையும். நம் உடலில் நேர்மறையான மாற்றங்கள் பல தென்படுவதை நாம் உணர முடியும். GERD, PCOS, ஹைப்பர்டென்சன், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளுக்கும் இது தீர்வு அளிக்கிறதாம். இப்போது மூலிகை டீ-க்கு என்னென்ன தேவை, இதை எப்படி தயாரிக்கலாம் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

    • சுமார் 300 எம்எல் அளவுக்கு தண்ணீர்
    • கறிவேப்பிலையில் 15 இலைகள்
    • புதினா 15 இலைகள்
    • ஒரு டீ ஸ்பூன் பெருஞ்சீரகம், 2 டீ ஸ்பூன் அளவு மல்லி விதைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை : 

    • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.
    • தண்ணீர் கொஞ்சம் சூடானவுடன் அதில் கறிவேப்பிலை, புதினா உள்ளிட்ட அனைத்தையும் சேர்க்கவும்.
    • கொஞ்சம் கொதி வந்தவுடன் லேசாக சிம் அளவில் தீயை வைக்கவும்.
    • நீங்கள் சேர்த்துள்ள ஒவ்வொரு பொருளில் இருந்தும் அதன் சாறு மற்றும் நிறமியானது தண்ணீரில் கலந்து விடும்.
    • இப்போது உங்களுக்கு தேவையான மூலிகை டீ தயார் ஆகிவிட்டது. இதனை வடிகட்டி சூடு ஆறிய பின்னர் பருகலாம்.
    • இனிப்புச் சுவை வேண்டும் என்று விரும்புபவர்கள் கொஞ்சமாக பனங்கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தேன் கலந்து பருகலாம்.

கிடைக்கும் நன்மைகள் : 

மூலிகை டீ-க்காக நீங்கள் சேர்க்கும் கறிவேப்பிலையில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். புதினா சேர்த்துக் கொள்வதால் குடல் நலன் மேம்படும். செரிமானப் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...