விஜய்யின் கல்வி விருது விழாவில் மாணவர்கள் தேர்வில் குளறுபடி?

Date:

Share post:

விஜய்யின் கல்வி விருது விழாவில் மாணவர்கள் தேர்வில் குளறுபடி? ஆங்காங்கே எழும் புகார்கள்

Vijay’s education award ceremony students messed up in the exam? Sporadic complaints

நடிகர் விஜய்யின் கல்வி விருது விழாவில் மாணவர்களை தேர்வு செய்வதில் குளறுபடி என புகார் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது.

அதில் முதல் கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1.500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

விழாவை ஒட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வருகை தரத்தொடங்கியுள்ளனர். விஜய் 10:30 மணி அளவில் மண்டபத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் மாணவர்களை தேர்வு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைத் தேர்வு செய்வதில் குளறுபடி என புகார் எழுந்துள்ளது.

தாம்பரம் தொகுதியில் 492 மற்றும் 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தேர்வு செய்யாமல் 486 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...