காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம்

Date:

Share post:

காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம்

Minister Senthil Balaji transferred to Cauvery Hospital

காவேரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், எவரொருவரையும் கைது செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றப்பட வில்லை என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், சரியான நடைமுறைகள் பின்பற்றாமல் ரிமாண்ட் செய்யப்பட்டால், ஆட்கொணர்வு மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையது என்று தெரிவித்த அவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அவர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டி புழல் மத்திய சிறையில் இருந்து அதற்கான ஆணையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் விமலாவுக்கு இரவு சுமார் 20.30 மணிக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டது.

அமைச்சரை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பிற்காக இரண்டு உதவி ஆணையர்கள் 4 ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பிற்காக காவேரி மருத்துவமனையில் போடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கு அடுத்த கட்ட சிகிச்சை செய்யப்படும் என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...