உதய நிதி நடித்த மாமன்னன் படம் வெளியீடு எப்போது?
மாமன்னன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மாமன்னன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படம் வருகிற ஜூன் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.