20.09.2022 செவ்வாய் கிழமை ராசிபலன்

Date:

Share post:

20.09.2022 செவ்வாய் கிழமை ராசிபலன்

மேஷம் 

உங்கள் மனதில் இருக்கும் பழைய எண்ணங்கள் வருத்தம் அளிக்கும், பிறரின் ஆறுதல் மூலம் மனம் புத்துணர்ச்சி அடையும். பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

குடும்ப வாழ்ககை இனிமையாக இருக்கும், வாழ்க்கை துணையின் அன்பு மனதிற்கு ஆனந்தம் அளிக்கும். நண்பர்களுடன் வெளியே செல்வீர். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் 

இன்றைய தினம் செய்யும் செயலில் கவனமாக இருக்க வேண்டும், தொழிலில் புதிய முயற்சி செய்வதை யோசித்து செய்யவும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகமாகும். பண வரவு இருக்கும் ஆனால் செலவு அதிகமாகும்.

குடும்ப வாழ்க்கை இன்று மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி உறவில் சிறிய கருத்து மோதல் உருவாகும். காதல் வாழ்வில் அமைதி காப்பது நன்மை அளிக்கும். உடல்நலத்தில் கால் சார்ந்த தொல்லைகள் வரும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் 

உங்கள் முயற்சியில் இன்று பல தடங்கல் ஏற்படும், புதிய முயற்சிகள் வெற்றி காண பொறுமை வேண்டும். வேலையில் ஒற்றுமை தேவைப்படும். பயணத்தின்போது கவனம் வேண்டும். செல்வத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும்.

குடும்ப வாழ்க்கை புரிதல் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை தடைகளை கடக்க உதவும். மாணவர்கள் கல்வியில் பிரச்சனை இல்லை, வழக்கம்போல் இயங்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும், உடல்வலி போன்ற பிரச்சனை வரலாம். தடை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் 

நீங்கள் எதிர்பார்க்காத வெற்றி இன்று கிடைக்கும், தொழிலில் நல்ல மதிப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மீது நல்ல மதிப்பு பிறக்கும். சுய தொழிலில் நிலையான அங்கிகாரம் கிடைக்கும். ஓரளவு நல்ல பண வரவு உண்டு.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். காதல் வாழ்வில் உங்கள் உணர்ச்சிவம் புரிதலை பாதிக்கும். நண்பர்களுடன் நிம்மதியாக பொழுதைக் கழிக்க முடியும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் 

இன்றைய தினம் உங்கள் மனதில் ஏற்படும் தயக்கம் சிறிய குழப்பத்தை அளிக்கும். தொழில் ஸ்தானத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பண வரவு இருக்கும், தேவையில்லாத செலவுகள் அதிகமாக இருக்கும்.

காதல் வாழ்வில் இன்று திருப்தி இருக்காது. குடும்பத்தினரின் மனதை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்க முடியும். வயிறு சார்ந்த பிரச்சனை வரும். போராட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி

இன்று நீங்கள் வழக்கத்தை விட சந்தோஷமாக இருப்பீர், நீங்கள் கை வைக்கும் செயல் ஜெயமாகும். பணியிடத்தில் குறித்த வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு, வருமானம் உயரும்.

கணவன் மனைவி உறவில் நல்லுறவு இருக்கும். காதல் வாழ்வில் இன்றைய தினம் சிறந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுறுசுறுப்பாக செயல்படுவீர். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

துலாம் 

உங்களுக்கு இன்றைய தினம் புரியாத ஒரு மனநிலை இருக்கும். ஆன்மீக நாட்டம் உதிக்கும். தொழிலில் புதிய ஐடியாக்கள் உருவாகும். உங்கள் கையில் பணப்புழக்கம் குறையும். சிறிய அளவு கடன்கள் வாங்கும் நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும், கவனம் சிதறும்.

குடும்பத்தினரின் அன்பு மனதிற்கு ஆறுதலாக இருக்கும். இல்லற வாழ்வில் சிறிய சண்டைகள் வரும். காதல் வாழ்வில் புரிதல் குறையும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம்

இன்றைய தினம் தொழிலில் கிடைக்கும் வெற்றி உங்களை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும். பணியிடத்தில் உங்கள் புகழ் ஓங்கும், உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். பண வரவு குறைவாக இருந்தாலும் நிதி நெருக்கடி இருக்காது.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாது. காதல் வாழ்வில் ஒற்றுமை பிறக்கும், திருமண பந்தமாக மாற்ற முயற்சி செய்யலாம். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு 

இன்றைய தினம் உங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாகக் கோபம் வரும். தொழில் ஸ்தானம் சுமுகமாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, செல்வத்தை சேமிக்க முடியும்.

குடும்ப வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாளாக இருக்கும், உங்கள் கோபம் குடும்பத்தில் சச்சரவு அளிக்கும். நண்பர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். உடல்நலம் நன்றாக உள்ளது. சினம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் 

இன்றைய தினம் உங்களுக்கு முடிக்காத காரியங்களை முடிக்க அதிகமாக அலைய வேண்டியதாக இருக்கும். அலுவலகத்தில் வேலைகள் அதிகமாகும். அதிகமான நேரத்தை பணியில் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். நிதிநிலையில் பிரச்சனை இல்லை.

குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், கணவன் மனைவி உறவு நிம்மதியாக நகரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திடீர் பயணம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, ஓய்வு தேவைப்படும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம்

உங்கள் முயற்சி பலன் சரியாக இருக்குமா என்ற குழப்பம் உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும். அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். தொழிலில் வேலைகள் வழக்கம் போல் செயல்படும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பர். செலவு இன்று வரவைக் காட்டிலும் அதிகமாகும்.

குடும்பத்தில் அனுசரித்துச் சென்றால் சந்தோஷமாக இருக்கலாம். காதல் வாழ்வில் பிரச்சனை இல்லை. சுற்றத்தாருடன் பொறுமையாக நடக்க வேண்டும், உறவினர் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் ஏற்பட்டு மறையும். வெற்றி!

உங்கள் வீட்டு பூஜைக்கு தேவையான அனைத்து பூஜை பொருள்கள் மற்றும் நாட்டு மருந்து பொருள்கள் வாங்குவதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் 

இன்று பணியிடத்தில் இருக்கும் வேலை சுமை மனதிற்கு பதட்டம் அளிக்கும். உங்களின் தெளிவான திட்டம் அலுவலக பணிகளை சிறப்பாக முடிக்கும். பண வரவு குறைவாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் அமைதி காக்க வேண்டிய நாளாகும். காதல் வாழ்வில் பொறுமை தேவைப்படும், சாதாரணமான பேச்சு சண்டையாக மாறலாம். குடும்ப செலவு அதிகரிக்கும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...