16.09.22 வெள்ளி கிழமை ராசி பலன்கள்

Date:

Share post:

16.09.22 வெள்ளி கிழமை ராசி பலன்கள்

மேஷம் 

இன்றைய தினம் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

 

பணவரவு சுமாராக தான் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு, சிக்கனத்தை கடைபிடியுங்கள். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாள் முழுவதும் சோர்வாக காணப்படுவீர்கள். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் 

இன்றைய நாள் எந்த காரியத்தையும் கவனமான முறையில் ஆற்ற வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் தள்ளிப்போடுங்கள். இன்னைக்கு உகந்த நாள் அல்ல. பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். சிலருக்கு வாகன பராமரிப்பு சார்ந்த செலவுகள் ஏற்படும். துணையுடன் கோபத்தை குறைத்துக் கொண்டு சமநிலையான அணுகுமுறையோடு செயல்படுவது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் 

இன்றைய நாள் அனுகூலபமான நாள். உங்க திறமைகளை வெளிபடுத்த வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும்.

 

இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் லாபம் எதிர்பாராத அளவு இருக்கும். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கடகம் 

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும்.

பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் 

எந்த காரியங்களையும் முன்கூட்டியே திட்டமிடுவது வெற்றியை அள்ளிக் கொடுக்கும். பணியிடத்தில் தடைகள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும்.

இல்லற வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம். இன்றைய தினம் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி 

நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எந்த செயலிலும் பொறுமையை கையாள வேண்டும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

ஆன்மீகம் சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு புரிதல் ஏற்படும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். நடக்கும்போது கவனம் தேவை. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் 

இன்று நம்பிக்கையாகச் செயல்படும் நாள். வெற்றி மேல் வெற்றி ஈட்டுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாளாக அமையும். கடின உழைப்புக்கேற்ற பயன்களைப் பெறுவீர்கள். பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள்.

பண வரவு நன்றாக இருக்கும். மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை நீக்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 

இன்று உங்களது லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். மகிழ்ச்சிகரமான நாளாகவும், சந்தோஷத்தை அள்ளித் தரும் நாளாகவும் அமைகிறது. முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாகும்.

பணிகளில் மன அழுத்தம் காணப்படும். சக ஊழியர்களிடம் நட்புறவு மேற்கொள்வது பயனளிக்கும்.

உங்களது அன்பான அணுகுமுறையால், உங்கள் துணை உங்களை நன்கு புரிந்து கொள்பவராக அமையும். நிதிநிலை திருப்தியாக இருப்பதுடன் சேமிப்பதற்கான உந்துதல் அதிகரிக்கும். சிறந்த ஆரோக்கியம் கிடைக்கும் ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு 

இன்று உங்களது தடைகள் அனைத்தையும் வென்று திருப்திகரமாக இருக்கும் நாளாக உள்ளது. யோகா, தியானம் உள்ளிட்டவை மூலம், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். பணி தொடர்பாக இடையூறுகள் உண்டாகலாம்.

இருப்பினும், கடினமாக உழைத்தால் வெற்றிக்கு வழி கிடைக்கும். உங்களது துணையை புரிந்து கொள்ள முயல்வதற்கான நாளாக அமைகிறது.

இன்று பணப்புழக்கம் அதிகம் இருக்காது. வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். இதனால், பதட்டம் காணப்படும். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியவையாக அமையும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் 

இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக இல்லை. சவாலான சூழ்நிலையை எதிர் கொள்ளக் கூடியவையாக அமைகிறது. தேவையில்லாத பிரச்சனைகள் வரும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளால், கவலை உண்டாகும்.

பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதல் அடையலாம். அதிக பணிச் சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமாகச் செயல்படுவது நல்லது.

பணப்புழக்கம் குறைவாக இருகும். இது அதிருப்தியை உண்டாக்கும். மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்ய வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 

இன்று வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நல்ல புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும்.

இதனால், சேமிப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருந்து வந்த மந்தத் தன்மை நீங்கி விடும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்வது நல்லது

பயணங்கள் தொடர்பானவற்றில் மிகக் கவனமாக இருப்பது நல்லது. எல்லா விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்… பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் 

எண்ணிய முயற்சிகளில் வெற்றியை ஈட்டுவீர்கள். இன்று எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாள். மேலும், பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும்.

வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உற்சாகமாக செயல்படக் கூடிய நாளாக அமைகிறது.

பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வாஸ்துபடி வீட்டின் படிகட்டுகள் எப்படி இருக்க வேண்டும் 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...