தினம் ஒரு திருக்கோயில்-திருக்கருகாவூர்

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-திருக்கருகாவூர்

திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்

திருக்கருக்காவூர் – திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும்.

இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.

பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.

தல வரலாறு

ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது.

திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.

மாதவி (முல்லைக்கொடி)யை தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது

தல சிறப்புகள்

ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.

இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன்|லிங்கமும் உள்ளது.

மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.

சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.

இத்தலத்தில் தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.

இத்தலத்தில் உள்ள நந்தி – உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.

கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.

இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.

கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.

கருவுடன் மரணமடைவோரும் இல்லை.

கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இத்தலத்தில் சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.

முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் ” என்று தலம் குறிக்கப்படுகின்றது.

கர்ப்பரட்சாம்பிகை கோவில் தல வரலாறு

7 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த திருக்கருகாவூர் திருக்கோவிலின் இறைவன் முல்லைவன நாதர் எனும் பெயருடன் விளங்குகிறார்.

இறைவி “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” எனும் பெயருடன் விளங்குகிறாள். திருஞானசம்பந்தர், அப்பர், திருநாவுக்கரசர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தளம் இது.

முற்காலத்தில் நித்துருவர் என்பவர் வேதிகை என்ற மனைவியுடன் இவ்வூரில் வசித்து வந்தார். தங்களுக்கு குழந்தைபேறில்லை என வருந்திய இத்தம்பதியினர்.

இக்கோவிலின் இறைவனான முல்லைவனநாதரை வழிபட்டு வந்த போது வேதிகை கருவுற்றாள்.

ஒரு நாள் வேதிகையின் இல்லத்திற்கு யாசகம் கேட்டு வந்த முனிவர் ஒருவர், வீட்டினுள் பிரசவ மயக்கத்தில் இருந்த வேதிகை தான் யாசகம் கேட்டும் வெளியே வராமல் தன்னை அவமதித்ததாக கருதி, அவளுக்கு சாபமிட்டு சென்றார்.

அதன் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் மனவேதனையடைந்த வேதிகை இக்கோவிலின் தேவியான

பார்வதியிடம் முறையிட, அந்த இறைவி வேதிகையின் கருவை ஒரு குடத்தில் பத்து மாதம் காலம் காப்பாற்றி “நைதுருவன்” என்ற ஆண் குழந்தையாக வேதிகையிடம் தந்தாள்.

தன் பக்தையின் கர்ப்பத்தை ரட்சித்ததால் அன்று முதல் இந்த ஆலயத்தின் இறைவி “கர்பரட்சம்பிகை” என அழைக்கப்படுகிறாள்.

இறைவனே குழந்தை கருவை அழியாமல் காத்ததால் இத்தலம் “திருக்கருகாவூர்” என பெயர் பெற்றது.

தல சிறப்பு

இக்கோவிலின் இறைவனான முல்லைவனநாதரின் லிங்க வடிவம் எறும்பு புற்றினால் ஆன சுயம்பு வடிவமாகும்.

கருவுற்ற பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட அவர்களுக்கு கருச்சிதைவு போன்ற எந்த ஒரு விபரீதங்களும் ஏற்படுவதில்லை.

எனவும் மேலும் இப்பெண்கள் அனைவருக்கும் சுக பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதாகவும் கூறப்படுகிறது.

கருவுற்ற பெண்களுக்கு குறைப்பிரசவம், பிரசவ கால வேதனை, பேறு கால மரணம் போன்ற எதுவும் இந்த கர்பரக்ஷம்பிக்கையின் அருளாற்றலால் ஏற்படாமல் தடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கோவில் நடை

திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

கோவிலின் முகவரி

ஸ்ரீ முல்லைவன நாதர் திருக்கோவில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம் – 614 302 தொலைபேசி எண் : 4374 273502, 4374 273473, 97891 60819

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...