சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

Date:

Share post:

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் ஜிம் முருகன் கைது.. நடந்தது என்ன?

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டார்.

100 அடி சாலையில் அரும்பாக்கத்தில் உள்ளது ஃபெடரல் வங்கி. அங்கு நேற்று முன் தினம் நகைப் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இங்கு பொதுமக்களும் வங்கி சார்ந்த பணிகளுக்காக வருவதும் போவதுமாக இருந்தனர்.

அப்போது பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர் புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் கட்டிப்போட்ட மர்மநபர்கள்,ரூ 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

விசாரணை

இது குறித்து தகவலின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விடிய விடிய விசாரணை

இந்நிலையில் நேற்றுமுன் தினம் முதல் விடியவிடிய நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஊழியர் முருகன் என்பவர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

வங்கி காவலாளிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிகிறது.

இந்த சம்பவத்தில் இன்னும் இருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது

6 தனிப்படைகள்

இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் முருகனின் உறவினர் பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் முருகன், சந்தோஷ் ஆகியோரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி கைது

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான முருகனை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முருகனையும் போலீஸார் கைது செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகையில் 18 கிலோவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சூர்யாவை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான பொதுவான தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...