பிவி.சிந்து இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா

Date:

Share post:

பிவி.சிந்து இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா

பிவி சிந்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. உண்மையான சாம்பியன்

புசார்லா வெங்கட சிந்து

புசார்லா வெங்கட சிந்து ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகத்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர்.

இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஒலிம்பிக் தங்க வேட்டை இவரை ஆதரிக்கிறது.

இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார்.இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.

ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

விருதுகள்

போர்ப்சு இதழின்படி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முறையே 8.5மில்லியன் மற்றும் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதன் மூலம் அதிகம் வருமானம் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றார்.

இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினையும் , குடிமை விருதுகளில் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினையும் பெற்றுள்ளார்.

சனவரி 2020இல் மூன்றாவது குடிமை விருதான பத்ம பூசன் விருதினையும் பெற்றார்.

காமன்வெல்த் தொடர்

இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கடினமான கஷ்டத்தையும் மீறி காமன்வெல்த்தின் தங்கப்பதக்கம் என்று சாதனை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

எனினும் துரதரிஷ்டம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடரிலிருந்து தாம் விலகுவதாக பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.

காமன்வெல்த் தொடரில் விளையாடும் போது கால் இறுதி சுற்றில் தமக்கு காயம் ஏற்பட்டதாகவும், அப்போது வலியால் துடித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் பதக்கம் வென்றே தீர வேண்டும் என்ற முயற்சியோடு தான் தொடர்ந்து விளையாடினேன் முடிந்த அளவு முயற்சி செய்தேன்.

அதற்கு என்னுடைய பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள் என்று கூறினார். காமன்வெல்த் தொடரின்

இறுதி போட்டியில் தம்மால் தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்ததாக குறிப்பிட்ட அவர் போட்டி முடிந்து ஹைதராபாத் சென்று உடனடியாக மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டேன்.

அதில் தமது இடது காலில் பிராக்சர் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்று சிந்து குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சில வாரம் ஓய்வில் இருக்க தாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சிந்து சிறிது காலத்தில் மீண்டும் பயிற்சி தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.

ஆட்டக்கால சாதனைகள்
  • உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் பி.வி.சிந்து ஆவார்.
  • 2013 ஆம் ஆண்டில் நடந்த முக்கியப் போட்டிகளில் இரண்டு தங்கமும்,ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
  • 1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.
  • உலக சம்மேள தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் உள்ளார்.
  • பி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இள வயதில் (பதினெட்டு வயது) அர்ஜுனா விருதையும் வாங்கியுள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டு திசம்பர் 16 ஆம் நாள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎப் உலக சாம்பியன் போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.
  • 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் நடந்த உலக வாகையாளர் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான பொதுவான தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...