நீங்கள் வருமான வரி செலுத்துபவரா?

Date:

Share post:

நீங்கள் வருமான வரி செலுத்துபவரா?

அக்டோபர் 1 முதல் இந்த பென்ஷன் திட்டம் உங்களுக்கு கிடையாது!

அடல் பென்சன் யோஜனா

மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தில் ஏராளமானோர் பயன் பெற்று வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சகம் தற்போது திடீரென புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன்படி வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் சேருவதற்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வருமான வரி செலுத்துபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பதும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டு வருகின்றனர்.

அடல் பென்சன் யோஜனா

கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால் 60 வயதிற்கு பின்னர் ஓய்வூதியமாக

ரூ.1000 முதல் 5000 வரை கிடைக்கும் என்பதும் ஓய்வு காலத்தில் இந்த பணம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பாடாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

வருமான வரி செலுத்துவோர்

2015ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு திடீரென இந்தத் திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் வருமான வரி செலுத்துவோர் யாரும் அடல் பென்சன் திட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சேருவதற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

தடை இல்லை ஆனால் அதேநேரத்தில் இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் சேர்ந்து கொள்ளலாம் என்றும், அதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் வருமான வரி செலுத்துபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 1 அக்டோபர் 1ஆம் தேதிக்கு பின்னர் இந்த திட்டத்தில் சேர்பவர்கள் வருமான வரி செலுத்துபவரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்

வருமான வரி செலுத்துபவராக இருந்தால் அவரது பணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகம் அல்லது வங்கி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இந்த அடல் பென்ஷன் திட்டத்தில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலகம் அல்லது வங்கி ஆகியவற்றின் மூலம் இந்த திட்டத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேரலாம்.

4.01 கோடி உறுப்பினர்கள்

அடல் பென்ஷன் திட்டத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் வரை 4.01 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பாக கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 99 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனைவிக்கு ஓய்வூதியம்

இந்த திட்டத்தில் சேர்ந்து இருப்பவர்கள் மரணம் அடைந்தால் அவர்களது ஓய்வூதியம் அவரது மனைவிக்கு அவர் இறக்கும் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான பொதுவான தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...