செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கலை நிகழ்ச்சி

Date:

Share post:

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கலை நிகழ்ச்சி

மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

தரமான மற்றும் ராசியான பூஜை பொருள்கள் வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

இந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் ஆர்கடி வோர்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவல் ஆரோனுக்கு முதல்-அமைச்சர் நினைவு பரிசு வழங்கினார். இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வண்ணமயமான ஒளி, ஒலி அமைப்புகளைக் கொண்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் மாபெறும் வீரர்கள் ஆற்றிய பங்கை விளக்கும் வகையில் ‘தமிழ் மண்’ என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னனி குரலில் தமிழர்களின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிலும் அதே போன்ற கண்கவர் ஒலி, ஒளி காட்சி அமைப்புகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு, கமல்ஹாசனின் பின்னனி குரலுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கலை நிகழ்ச்சி

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...