ரிஷப ராசியின் குணநலன்கள்

Date:

Share post:

ரிஷப ராசியின் குணநலன்கள்

ரிஷப ராசிக்காரர்கள் அமைதியானவர்கள். அரவணைப்பவர்கள். ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் மீது யாராவது விரும்பாதவர்களாக, கவனிக்காதவர்களாக இருந்தால் அதை வெறுப்பார்கள்.

ஆனால் மிக முக்கியமாக ரிஷப ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள். ரிஷப ராசிக்காரர்களைக் காதலிப்பதென்பது வெற்றிபெறும் ஓட்டப் பந்தயத்தில் தினமும் ஓடுவது போன்றதாகும்.

அவர்கள் சுய சார்பான மனிதர்கள், ஆனால் அவர்களை கவர தினமும் நீங்கள் எதையாவது செய்ய வேண்டி இருக்கும்.

ஆனால் அதில் தினமும் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்றால் ரிஷப ராசிக்காரர்களுடனான வாழ்க்கை தினசரி திருவிழாவாகத்தான் இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்களின் மனதை மட்டும் நீங்கள் வென்று விட்டால், அதன் பிறகு உங்கள் மீதமிருக்கும் வாழ்நாள் அற்புதமானதாக இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்பு கொண்டவர்கள். அதனால் தான் அவர்கள் எப்போதும் சுதந்திரத்தை விரும்புகிறார்கள்.

இவர்களுடைய அமைதியான சுபாவம், அமைதியை விரும்பும் நடத்தை, அன்பு ஆகியவை அவர்களை சுற்றி ஒரு அன்பான பிரகாசத்தை ஏற்படுத்தி,

உங்களை எப்போதும் அவர்களைச் சுற்றி இருக்க வேண்டுமென்கிற எண்ணத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையாான மனிதர்களை விரும்ப முயற்சித்து பார்க்கவும் பழக்கவும் உங்களுக்குக் கூடுதல் காரணங்கள் தேவைப்பட்டால்,

இவர்களை நேசிக்க இரண்டாம் யோசனை தேவையில்லை என்பதற்கான 7 விஷயங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

சிற்றின்ப பிரியர்கள்

ரிஷப ராசிக்காரர்கள் விரைவான புணர்ச்சியை விட உணர்ச்சிகரமான நெருக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். அவர்கள் சின்னச் சின்ன விஷயங்களை கொண்டாடி ரசிப்பார்கள்.

தலைமுடியை கோதுவது, ஒருவர் தோளில் மற்றவர் சாய்ந்து தூங்குவது, நடைப்பயிற்சியின் போது கைகளை கோர்த்துக் கொள்வது என சின்ன விஷயங்களை விரும்பி செய்வார்கள்.

ஆனால் மென்மையான இனிய காதல் தருணங்களிலிருந்து திடீரென தடாலடியாக முன்னறிவிப்பின்றி கோபப்பட்டு கடுமையாக நடந்துக் கொள்வார்கள்.

ஆக்ரோஷமான காதலர்களாகவும், மென்மையான துணைவராகவும் இரண்டு வகையிலும் அவர்கள் மிளிர்வதால் நீங்கள் அவருடன் இருக்கும்போது இரு வேறு உலகங்களில் சிறந்த மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறலாம்.

​ரிஷபத்தின் சிறந்த தலைமைப் பண்பு

ரிஷப ராசிக்காரர்கள் சூழலுக்கு தக்கபடி அமைதியாகவும் திட்டமிட்டு அணுகுமுறைகளை மேற்கொள்வதிலும் வல்லவர்கள்.

அவர்களுடைய பகுத்தறிந்து செயல்படும் மனப்போக்கு சூழ்நிலைகளை பகுத்தாய்ந்து திறமையாக வழிநடத்த வைக்கிறது.

அவர்கள் ஆலோசனைகளை வழங்கும்போது ஒரு கூட்டத்திலுள்ள அனைவரின் பார்வையும் அவர்களின் மீதே இருக்கும் வகையில் அவர்கள் அழுத்தமில்லாமல் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்.

அவர்களுடைய நடைமுறை அறிவு அவர்களுக்கு நிதிகளை திறம்பட கையாளவும் அத்துடன் குடும்பத்தை பாதுகாக்கவும் உதவும்.

அமைதியை விரும்புவார்கள்

ரிஷப ராசியின் குணநலன்கள்

ரிஷபத்தை போல வேறு எந்த ராசியினரும் தங்களது தனிமையை சுதந்திரமாக அனுபவித்து மகிழ்வதில்லை.

அவர்களுக்கு நிலையான மனவுறுதியும், பாறை போல கடினமான உணர்ச்சிகளும் இருக்கும், இதனால் இவர்கள் மிக அரிதாகவே அடுத்தவர்கள் விருப்பத்திற்கு அதிகாரத்திற்கு கட்டுப்படுவார்கள்.

அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் பெற அவர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருப்பார்கள்.

கர்வம் கொண்டவர்கள் இல்லையென்றாலும் பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டார்கள்.

மேலும், அவர்களின் சுதந்திர உணர்வு அவர்களின் தீர்மானங்களை உறுதியாக்குகிறது. இது அவர்களை உறவுகளில் மிகவும் விசுவாசமான நபராக ஆக்குகிறது.

குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்

ரிஷப ராசியின் ராசி அதிபதி காதல் காரகனான சுக்கிரனாவார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் அவர்கள் நேசிப்பவர்கள் மீது முடிவில்லாமல் அன்பைப் பொழிவார்கள்.

இவர்கள் தங்கள் குடும்பத்தை நேசிப்பவர்களும் பாதுகாப்பவர்களுமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்திற்கு நிலையான ஒரு வாழ்க்கையை தருபவர்களாக இருப்பார்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் குடும்பத்தை வெகுவாக நேசிப்பவர்கள்.

எனவே நீங்கள் குடும்பத்தை தொடங்கும் குறிக்கோள் கொண்டவராக இருந்தால், ரிஷப ராசிக்காரர்களோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது பலனளிக்கும்.

உணவுப் பிரியர்கள்

ரிஷப ராசிக்காரர்கள் நல்ல சுவையான உணவை எப்போதும் விரும்புவார்கள். நீங்கள் அடிக்கடி நல்ல சுவையான உணவை அவர்களுக்கு பரிமாறினால், உங்கள் மீதான அன்பு இரட்டிப்பாகும்.

எனவே ரிஷப ராசிக்காரர்களை அணுகுபவர்கள் உங்கள் சமையல் கலையை வளர்த்துக் கொள்வது நல்லது.

எனவே நீங்கள் சமையலில் கைதேர்ந்தவராக இருந்தால். அவருக்கு உங்கள் மீது ஆசை அதிகரிக்கவும் உங்களை அவர் தேடி வரச் செய்யவும் அது உங்களுக்கு உதவும்.

சிறந்த பெற்றோர்.

ரிஷப ராசியின் குணநலன்கள்

ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றை தங்கள் பிள்ளைகளுக்குக் கடத்துகிறார்கள்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அமைதியான வாழ்க்கையை வாழ ஊக்குவிப்பார்கள், அதே சமயம், எல்லோரிடமும் மரியாதையாக நடந்து கொள்ள கற்றுத் தருகிறார்கள்.

ரிஷப ராசி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே சுதந்திரமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

மேலும் வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். எல்லாவற்றையும் விட, அவர்கள் தங்கள் பிள்ளைகளையும் குடும்பத்தையும் எல்லையில்லாமல் நேசிக்கிறார்கள்.

அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.

ரிஷப சிறப்பு குணம்


உங்களை வசப்படுத்திக் கொள்வதென்பது சற்று கடினமான விஷயம் தான்,

ஆனால் ஒருமுறை அவர்கள் உங்கள் வசமாகிவிட்டார்களென்றால், இத்தனை நாட்களாக அவர்களில்லாமல் நாம் எப்படி வாழ்ந்தோம் என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் மீது அன்பைப் பொழிவார்கள்.

அவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் காதலையும் தந்து உணவின் மீது ஆர்வத்தையும் தூண்டுவார்கள்.

ரிஷப ராசியின் குணநலன்கள்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...