ராசிபலன்-04-ஜூலை-2022

Date:

Share post:

ராசிபலன்-04-ஜூலை-2022

நல்ல நேரம்

காலை: 6:15- 07:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன்-04-ஜூலை-2022

மேஷம்:

மனதில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கினாலும் இன்று பதட்டமான சூழ்நிலையே நிலவும், அலுவலகத்தில் திட்டமிட்டு வேலை செய்வது உங்கள் உழைப்பை எளியதாக்கும்.

மனம் அவ்வப்போது வருத்தமடையும், மன நிலை மாற்ற வெளியில் செல்வீர்கள். உங்கள் பணத்தைக் கவனமாகச் செலவு செய்ய வேண்டும், இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாகும்.

ஆரோக்கிய செலவு இருக்கும், தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். திட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம்:

நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த வாய்ப்பு இன்று கிடைக்கும், தொழிலில் கடுமையான உழைப்புக்கு நல்ல முன்னேற்றம் காண முடியும், மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

இன்று பண வரவு இருக்கும், செல்வ நிலை சிறப்பாக உள்ளது.இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் உருவாகும், கலந்துரையாடி முடிவெடுப்பது நல்லதாகும்.

குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம்:

இதுவரை கடின வாழ்க்கை பகுதியைப் பார்த்த உங்களுக்கு இன்றைய தினம் சாதகமாக இருக்கும். உங்கள் லட்சியத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டும், தொழிலில் முன்னேற்றம் இருக்கும் புதிய வேலைகள் வரும்.

நிதி நிலை உயரும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றக் உள்ளது, கணவன் மனைவி உறவில் புரிதல் உருவாகும், மனம் திறந்து பேசி பல பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள்.

ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏதுமில்லை என்றாலும் அதிகமான ஓய்வு தேவைப்படும். இன்று இன்பமான சூழ்நிலை அதிகமாக இருக்கும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

கடகம்:

அயராது உழைக்கும் உங்கள் குணத்துக்கு இன்றைய நாள் உற்சாகமாக இருக்கும், நிம்மதியான மன நிலைக் கிடைக்கும். தொழில் இடத்தில் அதிக பணிகள் இருந்தாலும் மன உற்சாகமாக இருக்கும்.

அலுவலகத்தில் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். செல்வ நிலையில் தேவையில்லாத செலவுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது, வீட்டில் கோபமடையாமல் அமைதியாக இருப்பதால் நட்பான அணுகுமுறை கிடைக்கும்.

கல்வியில் நல்ல கவனம் பிறக்கும். ஆரோக்கியத்தில் திடீர் குறை ஏற்படும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவது உடல்நலக் குறையைத் தடுக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம்:

உங்கள் கருணை குணத்தால் அனைவரையும் அரவணைக்கும் உங்களுக்கு இன்று அமைதியான நாளாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

அதிக பணிகள் இருப்பதால் சற்று இறுக்கமாக இருப்பீர்கள், ஓய்வு எடுக்க நேரம் இருக்காது. இன்று எந்தவொரு முக்கிய முடிவுகளும் எடுக்காதீர்.தேவையில்லாமல் பேசுவதைத் தடுக்க வேண்டும்.

குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடலில் சிறுசிறு வலிகள் இருக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி:

மற்றவர்களை சந்தோஷப்படுத்த எப்போதும் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டு இருக்கும் உங்களுக்கு இன்று எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்காது,அலுவலகத்தில் சக பணியாளருடன் சகஜமாக பணியாற்றுவீர்கள்.

மனநிலை அமைதியான சூழல் ஏற்பட்டு தெளிவான முடிவுகள் எடுக்க முடியும். உங்கள் குடும்பத்தில் இன்று நெருக்கம் அதிகமாகும். இன்று மனதிற்கு நெருக்கமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமையும்.

நட்பு வட்டாரம் அதிகரிக்கும். சீரான செல்வ நிலை இருக்கும். உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

ராசிபலன்-04-ஜூலை-2022

துலாம்:

உங்கள் பேச்சு திறமையின் மூலம் இன்றைய தினத்தை மகிழ்ச்சியான நாளாக மாற்றும், பாசிட்வான மனத்தைரியத்தை உருவாக்கும்.

எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் நீங்கள் உழைப்பதால் உங்களுக்கு நல்ல மதிப்பு உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், உங்கள் நேர்மையான பேச்சுக்கு மதிப்பு இருக்கும்.

இன்று வருமானம் அதிகமாகும், மேலும் சேமிப்பு நிலை உயரும். இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம்:

உங்கள் பொறுமையான குணத்துக்கு இன்று சுமுகமான பலன் கிடைக்கும், மனதில் தெளிவான சிந்தனைகள் பல தோன்றும், பணியில் கவனமாக செயல்பட்டு குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சில முக்கியப் பொறுப்புகள் வரும். குடும்ப வாழ்க்கை திருப்தியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இடைவெளி குறைந்து நல்ல புரிதல் இருக்கும்.

சீரான பணப்புழக்கம் இருக்கும், நல்ல பண வரவு உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு:

வாழ்க்கையைப் பாடமாகப் பார்த்து செய்யும் தவறை திரும்ப செய்யாமல் தவிர்க்கும் குணம் கொண்ட நீங்கள் நடக்கும் விஷயங்களை லேசாக எடுத்து கொள்ளுவதன் மூலம் சிறப்பான மாற்றங்கள் பலவற்றை உணரலாம்.

தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும், மேலும் வளர்ச்சி காண மும்புரமாக பணியாற்றுவீர்கள். வீட்டில் சிறிய சண்டைகள் நடக்கும், கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியமாகும். நண்பர்களின் உதவி மிகப்பெரிய துணையாக இருக்கும்.

நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது, பெரிய செலவு எதுவும் வைத்து கொள்ள வேண்டும். தூக்கமின்மை ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும், அதனால் நல்ல ஓய்வு வேண்டும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

மகரம்:

இன்றைய தினம் உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும், நம்பிக்கையைத் தளரவிடாமல் இருக்க வேண்டும்.

அலுவலகப் பணியைச் சிறப்பாக முடிக்க நல்ல திட்டம் தேவைப்படும், பணி நேரத்தில் சில இடையூறு வரலாம். குழப்பமான மனநிலை இருப்பதால் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காதீர்.

வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, செலவு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏதும் பெரியதாக இல்லை.

கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம்:

மனதில் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த உங்களுக்கு இன்று மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், உங்கள் தனித்திறமை பாராட்டு பெற்று தரும். குடும்பத்தில் நல்ல புரிதல் இருக்கும்.

நிதிநிலை மிகவும் நன்றாக உள்ளது, திருப்திகரமான பண வரவு இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். திறமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்:

இன்றைய தினம் உங்களுக்கு விரும்பிய பலன் கிடைக்கும், திடமான மனம் இலக்கை எளியதாக அடையும்.

அலுவலகத்தில் பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பேச்சி முன்னேற்றத்தில் தடையாக மாறும்.

உங்கள் குடும்ப வாழ்வில் இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். சீரான பண வரவு உண்டு. உடல்நலம் நன்றாக உள்ளது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

ராசிபலன்-04-ஜூலை-2022

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...