பொன்னியின்-செல்வனை விமர்சித்த மாறன்

Date:

Share post:

பொன்னியின்-செல்வனை விமர்சித்த மாறன்

பொன்னியின்-செல்வனை விமர்சித்த மாறன்

இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி முன்னணி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்று சார்ந்த திரைப்படம்.

திரைப்படத்தினை பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் இயக்க, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவில், கவிப்பேரரசு வைரமுத்து-வின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

பொன்னியின் செல்வன்

கல்கி எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் என்னும் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணி ரத்னம்-ன் நீண்ட நாள் திரைக்கனவு.

இத்திரைப்படத்திற்காக தமிழில் முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சத்யராஜ் என பலர் நடிக்கின்றனர்.

தமிழில் மட்டும் இல்லாமல் இத்திரைப்படம் இந்தியாவில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாக்கப்படுவதால்

திரைப்படத்தில் ஹிந்தி, மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி முன்னனி நடிகர்களும் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்திய மதிப்பின் படி ருபாய் 800 கோடி பொருட்செலவில் இரண்டு பாகமாக உருவாகவுள்ளது.

கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் தற்போது திரைப்படமாக இயக்கி முடித்துள்ளார்.

மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லைக்கா ப்ரொடக்ஷன் இந்த திரைப்படத்தை பல கோடி செலவு செய்து தயாரித்துள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும்

இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின்-செல்வனை விமர்சித்த மாறன்

இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மணிரத்னத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

ஏதாவது ஒரு பிரபலத்தை தேவையில்லாமல் சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றியும் கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது மணி சார் தன்னுடைய படங்களில் மறைமுகமாக வலதுசாரி ஆர் எஸ் எஸ் சிந்தனைகளை விதைத்த முன்னோடி.

அதே போன்று தான் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் காவி கொடியுடன் தயாராகி உள்ளார்.

அந்தப் படத்தின் போஸ்டர் இதனை உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மணிரத்னம் காவி கொடியை ஆதரிக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறிய இந்த கருத்து தற்போது சிறு சலசலப்பை உருவாக்கியுள்ளது.

உண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்கால வம்சத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வரலாற்று காவியத்தை ப்ளூ சட்டை மாறன் இப்படி தேவையில்லாமல் விமர்சனம் செய்தது படகுழுவை டென்ஷன் படுத்தியுள்ளது.

மேலும் மணிரத்னமும் இது போன்ற விமர்சனங்களால் கடுப்பில் இருக்கிறாராம்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, அருள்மொழிவர்ம கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி,

சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்,

நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் என திரையுலக முன்னணி நடிகர்கள் இவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பொன்னியின்-செல்வனை விமர்சித்த மாறன்.

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...