பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர்

Date:

Share post:

பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர்

பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர்

பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர்

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். ஆனால் சமீப காலமாக அவரை பல பிரச்சினைகள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அதில் முக்கியமானது கமல்ஹாசனை வைத்து பல வருடங்களுக்கு முன்பே அவர் ஆரம்பித்த இந்தியன் 2 திரைப்படம் தான்.

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996ல் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன். கமலின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது.

அதன் பிறகு இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

ஆனால் பல பிரச்சினைகளால் நின்று போன இந்தத் திரைப்படம் ஒரு வழியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, தயாரிப்பாளர் உடன் கமல் மற்றும் சங்கருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்று இந்த படத்தின் பிரச்சனைகள் நீண்டு கொண்டே சென்றது.

இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து இந்த பிரச்சனைகளை எல்லாம் சுமூகமாக பேசி தீர்த்து விட்டனர்.

அதனால் மீண்டும் படப்பிடிப்பு வேலைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

ஆனால் இதில் தான் தற்போது ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்த திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படமும் ஆரம்பிக்கப்பட இருப்பதால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் சங்கர் இருக்கிறாராம்.

அதனால் இந்த படத்திற்கு முழுமையாக என்னால் ஒத்துழைப்பு தர முடியாது. சிறிது நாட்கள் இங்கேயும், சிறிது நாட்கள் அங்கேயும் என்று தான் என்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

பிரச்சனைகள் எல்லாம் ஒரு வழியாக தீர்ந்து படத்தை ஆரம்பிக்கலாம் என்றால் சங்கர் இப்படி முரண்டு பிடிக்கிறாரே என்று தயாரிப்பாளர் மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தியன் 2 திரைப்படம் இன்னும் எவ்வளவு காலதாமதம் ஆகுமோ தெரியவில்லை.

விக்ரமின் வெற்றி கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கு உயிர் கொடுத்தது போல் தெரிகிறது.

ஷங்கர் இயக்கிய பெரிய பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு பட்ஜெட் பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது, பின்னர், படப்பிடிப்பில் ஒரு பயங்கரமான விபத்தைத் தொடர்ந்து.

இந்தியன் 2

பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டுபிடிக்கும் சங்கர்

இருப்பினும், இப்போது, ​​​​திங்கட்கிழமை ஒரு திரைப்பட விழாவில் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின்படி, படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு சாதகமாக விஷயங்கள் செயல்படுகின்றன.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை விநியோகித்த தயாரிப்பு நிறுவனமான உதயநிதி, பிளாக்பஸ்டரின் 25வது நாளைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற வெற்றி சந்திப்பில் விருந்தினர்களில் ஒருவர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர்-தயாரிப்பாளர், பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து டான் தயாரிப்பாளரான இந்தியன் 2 தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...