40+ வயது பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

Date:

Share post:

40+ வயது பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்களே… நீங்க 40 வயதை கடந்துட்டீங்கனா இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க..!

40 வயதை எட்டும் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய கேல்சியம் சத்துகள் நிறைந்த உணவுகள் பட்டியலை பார்க்கலாம்.

நாம் எவ்வளவுதான் ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்தாலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வயோதிகம் சார்ந்த சில பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கி விடும்.

குறிப்பாக வயது அதிகரிக்கும்போது தோல்களில் சுருக்கம் ஏற்படுவதில் தொடங்கி, நமது எலும்புகள் பலவீனம் அடையும்.

கால்சியம் சத்து குறைபாடு : நம் உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுவதே எலும்புகள் பலவீனம் அடையக் காரணம் ஆகும்.

குறிப்பாக 40 வயதை எட்டுகின்ற பெண்களுக்கு எலும்புகளின் பலம் குறையத் தொடங்கும்.

இதை ஈடு செய்ய கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சோயாபீன்ஸ் : காய்கறி கூட்டு வகைகளில் நாம் விடும்பி சேர்க்க சோயா பீன்சில் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது.

இது நம் எலும்புகளை பலப்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கிறது. இதில் விட்டமின் டி சத்து நிறைந்துள்ளது.

இலைச்சத்து காய்கறிகள் : இலைச்சத்து காய்கறி குடும்ப வகையைச் சேர்ந்த முட்டைக்கோசு, ப்ரக்கோலி, பாலக்கீரை உள்ளிட்ட அனைத்திலும் புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

பால் பொருட்கள் : நாம் தினசரி தவறாமல் எடுத்துக் கொள்கின்ற பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான வெண்ணெய், பன்னீர் போன்றவற்றில் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. குறிப்பாக வயோதிகம் அதிகரிக்கும்போது பால் அவசியமாகும்.

மீன் : சால்மன், டுனா போன்ற மீன்களில் புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது கால்சியம் தேவையை நிறைவு செய்வதோடு, அதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நமது கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது.

அதேபோல ஆட்டு எலும்புக்கறி அல்லது ஆட்டுக்கால் சூப் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் எலும்புகள் பலமடையும்.

பாதாம் : கால்சியம் சத்து தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நமக்கு வயதானாலும் கூட பலமாக இருக்க உதவுகிறது.

தினசரி பாதாம் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, தசை வலி போன்றவை நீங்கும். எலும்புகளுக்கு இது வலுவூட்டும்.

முட்டை : புரதம், கால்சியம் மற்றும் விட்டமின் டி போன்ற சத்துக்கள் முட்டைகளில் நிரம்பியுள்ளன. உங்கள் வயது மற்றும் உடல் அமைப்பை பொறுத்து, தினசரி எடுத்துக் கொள்ளும் முட்டைகளின் எண்ணிக்கையை வரையறை செய்து கொள்ளலாம்.

பருப்புகள் : பீன்ஸ் விதைகள், தட்டைப்பயறு, பருப்பு வகைகளில் கால்சியம் சத்து உள்ளது. இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து மிகுதியாக கிடைக்கும். தினசரி கூட்டு அல்லது சாம்பார்களில் இதை சேர்த்துக் கொள்ளலாம்.

விதைகள் : சியா விதைகள், பரங்கி விதைகள் போன்றவற்றில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவையான புரதம் மற்றும் இதர சத்து தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.

40+ வயது பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

================================================

ஆதார் – பான் இணைப்பு இன்றே கடைசி நாள்…!

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...