உங்கள் ராசியின் பலன் – ஜூன் 30

Date:

Share post:

உங்கள் ராசியின் பலன் – ஜூன் 30

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ…

உங்கள் ராசியின் பலன் – ஜூன் 30

மேஷம்: 

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கி வழியும். உங்கள் உறவு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு இதுவே அறிகுறி.

உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கெரியர் அல்லது பொருளாதாரத்தை பொறுத்தவரை வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உங்கள் பாதையில் சவால்கள் அல்லது தடைகள் வந்தாலும், உறுதியான மனதோடு முன்னோக்கி செல்லுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட நிறம் இண்டிகோ மற்றும் அதிர்ஷ்ட அடையாளம் மயில் இறகு.

(உங்கள் ராசியின் பலன் – ஜூன் 30)

ரிஷபம் : 

புதிய உறவை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய உறவை வலுப்பெற செய்யக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

உங்களுக்குள் இருக்கக்கூடிய உறவு ஆழமாகும். உங்கள் கெரியரில் பொருளாதார ரீதியாக வெற்றிகள் வந்து குவியும்.

இதனால் பணவரவு அதிகரிக்கும். பணம் செலவழித்தல் மற்றும் முதலீடுகள் செய்தல் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

வேலை மற்றும் வீடு ஆகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையை உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கான அன்றாட பயிற்சியில் ஈடுபடுங்கள்.

பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 66, அதிர்ஷ்ட நிறம் பிங்க், அதிர்ஷ்ட அடையாளம் ருத்ராட்ச கொட்டை.

மிதுனம் : 

திறந்த மனதோடு மனதில் இருப்பதை வெளிப்படையாகவும், உண்மையாகவும் பேசுவது உறவுகளை வலுப்பெறச் செய்யும்.

உங்கள் கெரியரில் புதிய வாய்ப்புகள் மற்றும் யோசனைகள் தேடி வரலாம். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளக்கூடிய பழக்க வழக்கங்களை பின்பற்றுங்கள்.

ட்ராபிக் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். உங்களுக்கான

அதிர்ஷ்ட எண் 26, அதிர்ஷ்ட நிறம் பிரவுன். எந்த ஒரு விஷயத்திலும் தனித்து செயல்படுவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

கடகம்: 

உங்கள் காதலர் அல்லது காதலியுடன் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

எந்த விஷயத்திலும் பொறுமையாக இருங்கள். வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகிய இரண்டும் இயற்கையானது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பயணம் செய்வதன் மூலமாக புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளையும், புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 17, அதிர்ஷ்ட நிறம் சில்வர் மற்றும் புது வரவு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரலாம்.

சிம்மம்:

குடும்ப வாழ்க்கையில் வெற்றியும், சாதனைகளும் கிடைக்கும். உங்கள் துணையுடன் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகவும், நேர்மையாகவும் கூறுவது நல்லது.

உங்கள் கெரியரில் எதிர்பாராத வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். ஆகவே பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் இருப்பது உங்களுக்கு நல்லது.

பணி நிமித்தமாக பயணம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் மூலமாக உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம்.

நீங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றி சிறிய அளவிலான திருட்டு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 25, அதிர்ஷ்ட நிறம் நீளம் மற்றும் நீங்கள் வேலை செய்யும் மேசை மீது டேபிள் காலண்டர் வைப்பது அதிர்ஷ்டத்தை தரும்.

கன்னி: 

குடும்ப வாழ்க்கை சுமூகமாக இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாக விவாதிக்கும் இரு நபர்களை மத்தியஸ்தம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

உங்கள் பழைய முதலீடுகள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளையும், பலன்களையும் தேடி தரலாம். பயணம் செய்வதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

ஆன்மீகத்தை நாடி செல்வது உங்களுக்கு பலன் இருக்கும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 4, அதிர்ஷ்ட நிறம் பீச், அதிர்ஷ்ட அடையாளம் ஃபேன்சி லாம்ப் ஷேட்.

துலாம் : 

உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுவதற்கான நேரம் கிடைக்கும். ஆன்மீகம் மீதான நம்பிக்கை அதிகரிக்கலாம். பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள்.

கெரியரில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு பிறரது உதவியை நாடுவீர்கள். உங்கள் கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியே வந்து ரிஸ்குகளை எடுப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 18, அதிர்ஷ்ட நிறம் லைலாக் மற்றும் அதிர்ஷ்ட அடையாளம் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்.

விருச்சிகம்: 

உங்கள் நண்பர்களுடனான நட்பை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பிறருடன் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க முயற்சி செய்வீர்கள்.

உங்கள் கெரியரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும் கல்விக்கு உதவக்கூடிய ஆசானை தேர்ந்தெடுப்பீர்கள்.

உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்.

புதிய இடங்களுக்கு சென்று புதிய அனுபவங்களை பெற்றிடுவீர்கள். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட நிறம் சையன், அதிர்ஷ்ட அடையாளம் ஃப்ளோரல் டிசைன்.

தனுசு: 

உங்கள் அன்புக்குரியவர்களுடன் உணர்வு பூர்வமாக நெருக்கமாவீர்கள். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பெற புத்தாக்க யோசனைகளில் ஈடுபடுங்கள்.

உங்கள் உள்ளுணர்வு சொல்லும் விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள். புதிய அனுபவங்கள் மூலமாக வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியே வந்து தெரியாதவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் அடுத்த நிலைக்கு செல்வதற்கு தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 77, அதிர்ஷ்ட நிறம் சாஃப்ரன், அதிர்ஷ்ட அடையாளம் தேக்குமர டேபிள்.

மகரம் : 

உங்கள் காதல் வாழ்க்கையில் பொறுப்பு அதிகமாகி உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வீர்கள்.

உங்கள் வாழ்க்கைக்கு உகந்த சரியான நபரை சந்திப்பீர்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருங்கள்.

இலக்குகளில் கவனம் செலுத்தி, உங்கள் திறன்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் திறன்களை நீங்களே ஒரு சில சமயங்களில் சந்தேகிப்பீர்கள்.

அவ்வாறு செய்ய வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 22, அதிர்ஷ்ட நிறம் கிரீம், அதிர்ஷ்ட அடையாளம் பெரிய காபி மக்.

கும்பம் : 

உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும், பாதுகாப்பாக உணர்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையை இது அதிகரிக்கும்.

கெரியரை பொருத்தவரை வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருபோதும் உங்கள் திறன்கள் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள்.

உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 45, அதிர்ஷ்ட நிறம் பிரவுன், அதிர்ஷ்ட அடையாளம் மணி பிளான்ட்.

மீனம் : 

புதிய உறவு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

உங்கள் கெரியரில் ஏராளமான சவால்களை சந்திக்க நேரிடலாம். தடைகளை உடைத்திட உங்களுக்குள் இருக்கக்கூடிய வலிமையை முன்னிறுத்துங்கள்.

பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எதையும் எதிர்கொள்ள மன வலிமையோடு தயாராக இருங்கள்.

பயணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை பெற்றுத் தரலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 3, அதிர்ஷ்ட நிறம் டார்க் க்ரே, அதிர்ஷ்ட அடையாளம் தரையில் படரும் கொடி.

===============================================

ஆதார் – பான் இணைப்பு இன்றே கடைசி நாள்…!

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...