ஆசன வாய் பகுதியில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதா..? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

Date:

Share post:

ஆசன வாய் பகுதியில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதா..? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

Are you itching in the anus area? This may be the reason..!

ஆசனவாய் பகுதியில் ஏற்பட கூடிய அரிப்பை ‘ப்ரூரிடஸ் அனி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். ஒரு சில காரணங்களால் இது ஏற்படுகிறது. என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றத்தால் எண்ணற்ற உடல் உபாதைகள் நமக்கு வந்து கொண்டிருக்கிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இதனால் பொதுவான ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் உண்டாவது ஒரு பக்கம் என்றால், நாள்பட்ட நோய் பாதிப்புகளும் வருகிறது.

இதில் அசவுகரியமான பல நோய் பாதிப்புகளும் உண்டு. அந்த வகையில், ஆசனவாய் பகுதியில் ஏற்பட கூடிய எரிச்சல் அல்லது நமைச்சல் பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கும்.

இதை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் பெரிய பிரச்சினையாக வெடிக்க கூடும்.

ஆசனவாய் பகுதியில் ஏற்பட கூடிய அரிப்பை ‘ப்ரூரிடஸ் அனி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

ஒரு சில காரணங்களால் இது ஏற்படுகிறது குறிப்பாக மூல நோய், தொடர்ந்து வயிற்றுப்போக்கு மற்றும் நோய்த்தொற்றுகள் ஆகியவை காரணமாக இது ஆசனவாய்ப் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மேலும், தோலில் அழற்சி ஏற்படுவதன் காரணமாகவும் ஆசனவாய் பகுதியில் எரிச்சல் இருக்கலாம்.

இந்த தொற்றின் தீவிரத்தை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அறிகுறிகள் :

ஆசனவாய் பகுதியில் தீவிரமான அரிப்பு, வீக்கம், எரிச்சல் ஆகியவை இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று அர்த்தம்.

மேலும் அந்த பகுதியில் புண் ஏற்பட்டு இருந்தாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. ஆசனவாய் பகுதியில் அரிப்பு என்பது அதிக வெப்பம் அல்லது அதிக ஈரப்பதமான காலநிலையில் ஏற்படலாம்.

அரிப்புக்கான காரணங்கள் :

ஆசனவாயில் ஏற்பட கூடிய அரிப்புக்கு சில காரணங்கள் உண்டு. தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, சுகாதாரமற்ற கழிப்பிடம், அதிக கெமிக்கல் கொண்ட பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக அரிப்பு உண்டாகலாம்.

மேலும், மோசமான சோப்புகளை ஆசனவாய் பகுதியில் பயன்படுத்துவது அல்லது அந்த பகுதியை அடிக்கடி துடைப்பதும் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த அரிப்பு நோய்த்தொற்றின் காரணமாகவும் இருக்கலாம்.

குறிப்பாக உடலுறவு மூலம் பரவும் ஈஸ்ட் தொற்றுகள் மூலமும் அரிப்பு ஏற்படலாம். மேலும், ஆசன வாய் பகுதியின் சருமம் வறண்டு இருத்தல், தோல் அழற்சியினால் தடிப்பு ஏற்படுதல் போன்ற காரணங்களும் இதில் அடங்கும்.

இவற்றுடன் சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் மூல நோய் ஆகிய பிற மருத்துவ நிலைமைகள் இருந்தாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படலாம்.

எப்போது மருத்துவரிடம் செல்லலாம்? 

ஆசனவாய் பகுதியில் அரிப்பு கடுமையாக இருந்தாலோ, மலம் கழிக்கும் போது இரத்தம் வந்தாலோ, தொற்றுகளால் மோசமான எரிச்சல் இருந்தாலோ மருத்துவரிடம் அவசியம் செல்ல வேண்டும்.

மேலும், ஆசனவாய் பகுதியில் மிக கடுமையான அசவுகரியம் இருந்தாலும் மருத்துவரிடம் செல்லலாம். மேற்குறிப்பிட்ட, அறிகுறிகள் இருந்தாலும் அவற்றை தவிர்க்காமல் சிகிச்சை பெறுவது நல்லது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...