சென்னை பெரம்பூர் நகை கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்தது தனிப்படை போலீஸ்..!!

Date:

Share post:

சென்னை பெரம்பூர் நகை கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்தது தனிப்படை போலீஸ்..!!

Chennai Perambur jewelery shop robbery case arrests the main culprit..!!

சென்னை பெரம்பூர் நகை கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீஸ் கைது செய்தது. சென்னை பெரம்பூரில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.

ஸ்ரீதர் என்பவரின் நகை கடையின் ஷட்டரை வெல்டிங் மிஷின் மூலம் துளையிட்டு ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், சிசிடிவி கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த கொள்ளை கும்பலின் கைவரிசை என தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த கஜேந்திரன், திவாகர், கங்காதர் ஸ்டீபன் உள்பட 6 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கொள்ளையன் கவுதமை பெங்களூருவில் தனிப்படை போலீஸ் கைது செய்தது.

இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...