ரதயாத்திரை நடக்கும் பூரி ஜகன்னாதர் கோயிலின் பிரசாதத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Date:

Share post:

ரதயாத்திரை நடக்கும் பூரி ஜகன்னாதர் கோயிலின் பிரசாதத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Do you know what is special about the offerings of the Puri Jagannath Temple where the Rathayatra takes place?

ஜகன்னாதர் கோயிலின் சமையலறையில் சமைக்கப்படும் ஒவ்வொரு உணவும் மகாலட்சுமி தேவியின் மேற்பார்வையில் செய்யப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும் அதில் ஒரு சில திருவிழாக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வருவர்.

அப்படி ஒரு திருவிழா தான் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரை.

இந்த திருவிழா பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும். மேலும் இது உலகின் பழமையான ரத யாத்திரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்களுக்கு ஜகன்னாத் தனது மூத்த சகோதரர் பலராமன் மற்றும் சகோதரி சுபத்ராவுடன் தனது தாய்வழி அத்தை வீட்டில் உள்ள குண்டிச்சா கோவிலுக்கு செல்ல அவரது இடத்தில் இருந்து தேரில் செல்லும் பயணம் தான் ரத யாத்திரை என்று இன்றுவரை  திருவிழாவாக கொண்டாடப்படுகிறது,

இதில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

இந்தத்  திருவிழா மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் ஜெகநாதர் கோவிலில் வந்தவண்ணம் இருக்கும்.

அதோடு இங்கு வழங்கப்படும்  மஹாபிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . பூரி  ஜெகநாதர் கோயிலின் பெரிய சமையல் அறையை ரசோய்   மெகா கிச்சன்  என்று அழைக்கின்றனர். அங்கு உணவு நீராவி மூலம் மட்டுமே சமைக்கப்படுகிறது.

ஜகன்னாத் பூரியின் சமையலறை உலகின் மிகப்பெரிய சமையலறைகளில் ஒன்றாகும்.

ஜகன்னாதர் கோயிலின் சமையலறையில் சமைக்கப்படும் ஒவ்வொரு உணவும் மகாலட்சுமி தேவியின் மேற்பார்வையில் செய்யப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

இதனால், இந்த சமையலறையில் தயாரிக்கப்படும் உணவு வீணாவதும் இல்லை, பற்றாக்குறையும் இல்லை என்கின்றனர்.

ஜெகநாதர் கோவிலின் இந்த பிரமாண்டமான சமையலறையில் சமைத்த உணவை இறைவனுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு முன்பு சுவைக்கப் படுவதில்லை, ஆனால் உணவுகளின் சுவை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல இந்த பிரசாத்தின் சிறப்பைக் கருதி ஜெகநாதருக்கு அளிக்கப்படும் உணவு ‘மஹாபிரசாத்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஒருமுறை வைணவ பக்தரான வல்லபாச்சாரியார் ஏகாதசி விரதத்தின் போது பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலுக்கு வந்ததாக ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது.

அங்கு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை உண்டபிறகு அவர் கடவுளைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்.  துவாதசி அன்று அவரது துதி முடிந்து அதன் பிறகு கூட பிரசாதம்  சாப்பிட்டு பாராட்டியுள்ளார்.

அன்றிலிருந்து இது  ‘மஹாபிரசாத்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த மெகா கிச்சனில் தினமும் சுமார் 80 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. விசேஷமாக  சமைக்கப்படும் மஹாபிரசாதத்தின் நுட்பம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இங்குள்ள அனைத்து உணவுகளும் மண் பானைகளில் மட்டுமே சமைக்கப்படுகின்றன. அதிகப்படியான உணவுகள் சமைப்பதால்  ​​7 பாத்திரங்கள்  ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டு சமைப்படும். இதனால், அனைத்து உணவுகளும் நீராவி மூலம் சமைக்கப்படுகின்றன.

சார் தாம்களில் ஒன்றான ஜகன்னாத் தாமில், மஹாபிரசாத் சுத்தமான சைவ முறையில் சமைக்கப்படுகிறது.

கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கங்கை மற்றும் யமுனை ஆகிய இரண்டு கிணறுகளில் இருந்து வரும் நீர், சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தினமும் 50 குவிண்டால் அரிசி, 20 குவிண்டால் பருப்பு, 15 குவிண்டால் காய்கறிகள் சமைக்கப்படுகின்றன.

இந்த மெகா கிச்சனில், 500 சமையல்காரர்களும், 300 உதவியாளர்களும் இணைந்து உணவு சமைக்கின்றனர்.

பிரசாதம்  சமைத்த பிறகு, அது முதலில் பார்வதி தேவியின் வடிவமான விமலா தேவிக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது, அதன் பிறகு அது அவரது உடன்பிறப்புகளான பலராமன் மற்றும் ஜெகந்நாதருக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலில் பிரசாதத்துடன் பக்தர்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவும் விற்கப்படுகிறது.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...