உடல் எடையைக் குறைக்க உதவும் நாவல் பழம்

Date:

Share post:

உடல் எடையைக் குறைக்க உதவும் நாவல் பழம்.. இப்படி சாப்பிட்டா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

A novel fruit that helps in weight loss

அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பழம், பொதுவாக இந்திய பிளாக்பெர்ரி என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கொளுத்தும் வெயில், தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவது போன்ற பலவித காரணங்களால் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க சத்தான உணவை நம் தினசரி வாழ்வில் கொண்டிருப்பது இன்னும் அவசியமாகிறது.

அதே போல,உடல் பருமன் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. இதற்கான தீர்வைத் தேடி மக்கள் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர்.

ஆனால், உடல் எடையை எளிதாக குறைக்க சில சிறந்த இயற்கை முறைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் நாவல் பழம் மூலம் செய்யக்கூடிய ஒரு எளிமையான ரெசிபி.

பருவகால பழங்கள், காய்கறிகளை உட்கொள்வதும், சரியான அளவில் தண்ணீர் குடிப்பதும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இத்தகைய நேரத்தில் எளிதில் கிடைக்கூடிய சத்தான பழங்களை வாங்கி உண்ண வேண்டும். அதில் ஒன்று தான் நாவல் பழம்.

அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பழம், பொதுவாக இந்திய பிளாக்பெர்ரி என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

உணவியல் நிபுணர் மேக் சிங், “நாவல் பழம் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, பழம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

மேலும் இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தோழனாகப் பார்க்கப்படுகிறது”. என்று கூறியுள்ளார்.

இன்று ஒரு அருமையான நாவல் பழ பானம் செய்முறையை உங்களுக்கு கூறுகிறோம். வீட்டில் எளிதாக தயார் செய்யும் விதத்தில் இதன் செயல்முறை இருப்பதால், அனைவரும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

ஜாமுன் ஷாட் செய்முறை : 

தேவையான பொருட்கள் : 

    • 250 கிராம் நாவல் பழம்
    •  ½ தேக்கரண்டி கருப்பு உப்ப
    •    1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை : 

    • நாவல் பழத்தை முதலில் நன்றாக கழுவ வேண்டும்
    • பின்னர் இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதையை அகற்ற வேண்டும்
    • இப்போது, விதை அகற்றிய நாவல் பழத்தை, கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.
    • தொடர்ந்து கலவையை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
    • கூடுதல் சுவைக்கு சிறிதளவு புதினாவை சேர்க்கலாம்.

அவ்வளவுதான். சூப்பரான நாவல் பழ ஷாட்ஸ் ரெடி. இது உங்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் கிடைக்கும் நாவல் பழத்தின் மரப்பட்டை, வேர், பழம், விதை, இலை போன்ற அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை.

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், மக்னீசியம், வைட்டமின் சி போன்ற ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...