விபூதி மலை முருகன் கோவிலின் சிறப்புகள்

Date:

Share post:

விபூதி மலை முருகன் கோவிலின் சிறப்புகள்

Highlights of Vibhuti Hill Murugan Temple

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள விபூதி மலை முருகன் கோவிலின் சிறப்புகள் பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி காட்டுப்பகுதிக்குள் மலைமேல் அமைந்துள்ள ஒரு முருகன் கோவிலுக்கு த்ரில்லிங்கான ஒரு அட்வெஞ்சர் பயணம் செய்துதான் செல்ல முடியும். இது ஆஃப் ரோடாக இருப்பதால் இங்கு தனியார் வாகனங்களில் செல்ல முடியாது. இங்கு வாடகை ஜீப்களில் தான் செல்ல முடியும்.

மலைமேல் இருக்கும் இந்த முருகன் கோவிலில் இருந்து சில்லென்ற வானிலைக்கு நடுவே உதகையின் அழகை ரசிக்கிற அனுபவம் வேற லெவல்ல இருக்கும். இப்படி ஒரு கோவில் எங்க இருக்கு? எப்படி இங்கு போகனும்? இங்க என்ன ஸ்பெஷல்னு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் வழியில் 29 கி.மீ தொலைவில் உள்ளது மசினகுடி. இந்த ஊரில் இருந்து சுமார் 4 கி.மீ பயண தூரத்தில் தான் விபூதி மலை அமைந்துள்ளது. மசினகுடி என்பதே ஒரு காட்டுப்பகுதி என்பதால் அருகில் உள்ள ஊர்களுக்கும், இடங்களுக்கும் செல்வதற்கு வாடகை ஜீப்கள் கிடைக்கின்றன.

மசினகுடியில் இருக்கும் ஜீப் ஸ்டாண்ட்டிற்கு சென்று விபூதி மலைக்கு போகனும்னு அப்படி சொல்லி ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கலாம்.

ஆஃப் ரோட் பயணம்..

மசினகுடியில இருந்து ஜீப்பில் கிளம்பி பொக்காபுரம் சாலையில் சுமார் 3 கி.மீ தூரம் வனப்பகுதிக்குள் பயணம் செய்து வரணும். அதற்கு அப்புறம் சாலை இருக்காது. எல்லாமே ஆஃப் ரோடு தான். கரடு முரடான அந்த பயணம் செம்ம த்ரில்லிங்கா இருக்கும். மேற்கொண்டு ஒரு கி.மீ இந்த ஆஃப் ரோடு பயணத்தை கடந்து விபூதி மலைய அடையலாம்.

இந்த விபூதி மலை மேல் தான் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1996ம் ஆண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது. முருகனுக்கு உகந்த தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோவில் கட்ட உதவிய இந்தி நடிகர்..

1996ம் ஆண்டு இந்த கோவிலை ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியரான விஜயகுமார் கட்டியபோது கோவில் கோபுரத்தை அமைக்க நிதி வசதி இல்லாமல் பரிதவித்தார். அப்போது இதுகுறித்து நீலகிரிக்கு ஷூட்டிங்கிற்காக வந்திருந்த இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இதுகுறித்து கேள்விப்பட்டு கோவில் கட்டுமானத்துக்காக பொருள் உதவி அளித்ததாக இந்த கோவிலை கட்டிய விஜயகுமார் தெரிவித்தார்.

இந்த கோவில் அமைந்துள்ள இயற்கை சூழலானது சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் கூட கட்டி இழுக்கிறது என்றே சொல்லலாம், 4 திசைகளிலும் 3 மாநிலத்தின் வனப்பகுதிகளை இங்கு பார்க்க முடியும். நீலகிரி மாவட்ட வனப்பகுதி சற்று அருகே கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதி அதனைத்தொடர்ந்து கேரளா மாநிலத்தின் வனப்பகுதி என மேற்கு தொடர்ச்சி மலைகளின் கண்கொள்ளா அழகை இங்கு நம்மால் பார்க்க முடியும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...