தேர்தலில் இனிமேல் கள்ள ஓட்டு போட முடியாது

Date:

Share post:

தேர்தலில் இனிமேல் கள்ள ஓட்டு போட முடியாது….வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்

You can no longer cast fake votes in elections….New technology has arrived

இது தேர்தல் கமிஷனுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தேர்தலில் போலி வாக்குகள் பதியப்படுவதை தடுக்க பீகார் மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தியை கையாண்டுள்ளது. வாக்காளர்களின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பற்றி இங்கு பேசுவோம்.

தொழில்நுட்பம் அதிகரித்துள்ள இந்தக் காலத்திலும், தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்வதையும், போலி வாக்குகளைப் போடுவதையும் தடுப்பது தேர்தல் கமிஷனுக்கு மிகவும் பொதுவான சவாலாக உள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று இந்த பிரச்சனையை தீர்க்க முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது

ஒரு நபரின் முழு விவரங்களையும் குறுகிய காலத்தில் அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியின் மூலம் ஒரு நாப் பற்றிய தகவல்களை 99.91% சரியாக சேகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தக் கருவி வாக்காளரின் முகத்தை அடையாள அட்டையுடன் பொருத்தி ஸ்கேன் செய்து 20 பிக்சல் அளவில் சரிபார்க்கும். இதற்கு 3 வினாடிகள் மட்டுமே ஆகும் என கூறப்படுகிறது.

இந்த கருவியின் முதல் சோதனையை 2018ல் தொடங்கிய FaceTagr நிறுவனம் தற்போது வெற்றியின் விளிம்பில் உள்ளது.

மே 25ல் நடந்த பீகார் மாநில ஊரக உள்ளாட்சி தேர்தலில், 450 ஓட்டுச்சாவடிகளில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜூன், 9ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 1700 ஓட்டுச்சாவடிகளில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, தேர்தல் சுமூகமாக நடந்தது. .

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் வாக்கெடுப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் கணிசமாகக் குறைத்துள்ளது.

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு நடத்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் போலித் திட்டுகள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...