கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் டப்பிங் செய்தார்

Date:

Share post:

கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் டப்பிங் செய்தார்

Keerthy Suresh dubbed in Telugu

2015ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித்குமார், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த படம் ‘வேதாளம்’. அஜித் குமாரின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

தற்போது இப்படம் தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காட்சிகளுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்.

இதை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்தார்.

இதுதவிர ‘ரகு தத்தா’, ‘சைரன்’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...